Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. இப்படி குழம்பு செய்யுங்க.. சாதம், சப்பாத்தி-ன்னு எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.
Meal Maker Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு மீல் மேக்கர் பிடிக்குமா? அடிக்கடி உங்கள் வீட்டில் மீல் மேக்கரை செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை மசாலா பொருட்களை வறுத்து அரைத்து மசாலா செய்து, மீல் மேக்கர் குழம்பு செய்யுங்கள்.
இந்த குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது சற்று தனித்துவமான சுவையில் இருக்கும். சட்டென்று ஒரு சிம்பிளான மற்றும் ருசியான மீல் மேக்கர் சைடு டிஷ் செய்ய நினைத்தால், இந்த மீல் மேக்கர் குழம்பை செய்யுங்கள்.

உங்களுக்கு மீல் மேக்கர் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* மீல் மேக்கர் - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சிறிது
மசாலா அரைப்பதற்கு...
* பட்டை - 1 துண்டு
* அன்னாசிப்பூ - பாதி
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 2
* கல்பாசி - சிறிது
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 15 பல்
* சின்ன வெங்காயம் - 15
* புதினா - 5 இலைகள்
* கொத்தமல்லி - சிறிது
* தேங்காய் - 1 கையளவு (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
குழம்பிற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* புளிப்பில்லாத தயிர் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில்
சிறிது உப்பு சேர்த்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 1
கப் மீல் மேக்கரை சேர்த்து, 2-3 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை
வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, நீரை முழுமையாக
பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த மீல் மேக்கரை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, அன்னாசிப்பூ,
ஏலக்காய், கிராம்பு, கல்பாசி, மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வறுத்த மசாலா பொருட்களை சேர்த்து நன்கு
பொடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் வதக்கி வைத்துள்ள வெங்காயம்
மற்றும் பூண்டு பற்களை சேர்த்து, அத்துடன் பொடியாக நறுக்கிய தேங்காயை
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து
நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள்
சேர்த்து நன்கு கலந்துவிட்டு, நறுக்கி வைத்துள்ள மீல் மேக்கரை
சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தயிரை சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள மசாலாவை
சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும்,
குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி
கிளறினால், சுவையான மீல்மேக்கர் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications