Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சாதம், சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்.. மீல் மேக்கர் குழம்பு செய்வது எப்படி?
உங்கள் வீட்டில் வித்தியாசமான குழம்பு செய்ய நினைத்தால், அந்த மீல் மேக்கரைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த மீல் மேக்கர் குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும்.
உங்கள் வீட்டில் மீல் மேக்கர் உள்ளதா? இதுவரை மீல் மேக்கரை நீங்கள் பிரியாணியில் சேர்த்து சாப்பிட்டிருப்பீர்கள் அல்லது வெஜிடேபிள் குருமாவுடன் சேர்த்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதை மட்டும் தனியாக கொண்டு குழம்பு செய்து சாப்பிட்டிருக்கமாட்டீர்கள். உங்கள் வீட்டில் வித்தியாசமான குழம்பு செய்ய நினைத்தால், அந்த மீல் மேக்கரைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த மீல் மேக்கர் குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும். மேலும் இதை செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு மீல் மேக்கர் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 1 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1-2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 1
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரில் மீல் மேக்கரைப் போட்டு மூடி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 15 நிமிடம் ஆனதும், மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, சிறிது நீரை ஊற்றி வேக வைக்க வேண்டும்.
* அதே சமயம் மிக்சர் ஜாரில், தேங்காய், சீரகம், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* தக்காளியானது நன்கு மென்மையாக வெந்ததும், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் மீல் மேக்கரை சேர்த்து கிளறி, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மீல் மேக்கர் குழம்பு தயார்.
Image Courtesy: steffisrecipes



Click it and Unblock the Notifications