சப்பாத்திக்கு மீல் மேக்கரை வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. மட்டன் கிரேவியே தோத்துடும்...

Posted By:

Meal Maker Kola Urundai Gravy Recipe In Tamil: இன்று இரவு சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு வீடே மணக்கும் அளவில் ஒரு ருசியாக கிரேவி செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் வழக்கமாக செய்யும் கிரேவியை செய்யாமல் சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட கிரேவி செய்ய நினைக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் மீல் மேக்கர் உள்ளதா? அப்படியானால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு வழக்கமாக செய்யும் கிரேவி போன்று செய்யாமல், மீல் மேக்கர் கோலா உருண்டை கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவியானது சிக்கன், மட்டன் கிரேவியே தோற்றுப்போகும் அளவில் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Meal Maker Kola Urundai Gravy How To Make a Meal Maker Kola Urundai Gravy Recipe

உங்களுக்கு மீல் மேக்கர் கோலா உருண்டை கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் கோலா உருண்டை கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* பொட்டுக்கடலை - 1/4 கப்
* சோம்பு - 1 டீஸ்பூன்

கோலா உருண்டை செய்வதற்கு...

* சுடுநீர் - தேவையான அளவு
* மீல் மேக்கர் - 1 கப்
* எலுமிச்சை சாறு- சிறிது
* உப்பு - சிறிது
* மிளகாய் தூள் - 1/2
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

கிரேவிக்கு...

* பட்டை - 3
* கிராம்பு - 3
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (அரைத்தது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கசூரி மெத்தி - சிறிது
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை மற்றும் சோம்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் சுடுநீரில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து, பின் அதில் மீல் மேக்கரை சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, ஊற வைத்த மீல் மேக்கரை குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, அதில் உள்ள அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் மீல் மேக்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மீல் மேக்கரை ஒரு கிண்ணத்தில் எடுத்து, அத்துடன் மிளகாய் தூள், கரம் மசாலா, சிறிது உப்பு, கொத்தமல்லி சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீரை தெளித்து நன்கு கைகளால் பிசைந்து உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து, மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் உள்ள எண்ணெயில், பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, தக்காளியில் உள்ள நீர் வற்றும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக பொரித்து வைத்துள்ள கோலா உருண்டைகளை சேர்த்து மெதுவாக கிளறி, பின் கசூரி மெத்தியை சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மீல் மேக்கர் கோலா உருண்டை கிரேவி தயார்.

Image Courtesy: Apoorvaa's Nalabagam

[ of 5 - Users]
Story first published: Friday, April 26, 2024, 19:53 [IST]
Desktop Bottom Promotion