Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
அடுத்தமுறை மீல் மேக்கரை வெச்சு இந்த மாதிரி மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அருமையா இருக்கும்...
Meal Maker Keema Masala Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு மீல் மேக்கர் பிடிக்குமா?
அப்படியானால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு கீமா மசாலா செய்யுங்கள். இந்த மீல் மேக்கர் கீமா மசாலா சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு மீல் மேக்கர் கீமா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் கீமா மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 1 கப்
* வெங்காயம் - 1
* தக்காளி - 1
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 3 பல்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* கிராம்பு - 3
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
பிற பொருட்கள்...
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மீல் மேக்கரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும். பின் அதில் சுடுநீரை ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் அந்த நீரை வடிகட்டிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான
நீரை பிழிந்துவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு, கீமா போன்று லேசாக
அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த மீல் மேக்கரை ஒரு கிண்ணத்தில்
தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே மிக்சர் ஜாரில் வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி,
பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போக
வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா,
மல்லித் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை
போக வேக வைக்க வேண்டும்.
* பின்னர் சோயா கீமாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி
கிளறி, எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத்
தூவினால், சுவையான மீல் மேக்கர் கீமா மசாலா தயார்.
Image Courtesy: cookingfromheart



Click it and Unblock the Notifications











