Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மட்டன் குருமா சுவையில் இருக்கும் மீல் மேக்கர் குருமா... இதை செஞ்சு வீட்ல எல்லாரையும் அசத்துங்க...!
Meal Maker Gravy Recipe In Tamil: வழக்கமாக சப்பாத்தி மற்றும் பூரிக்கு குருமாதான் பிரதான சைடிஷாக இருக்கும். சில சமயங்களில் சிக்கன் அல்லது மட்டன் வைத்து சைடிஷ் செய்யலாம். ஆனால் எல்லா நேரத்திலும் இவற்றையே செய்து கொண்டிருக்க முடியாது. சில சமயங்களில் புதிய சைடிஸ்களை முயற்சித்து பார்க்க வேண்டும்.
புதிய சைடிஷ் என்று வரும்போது அதை மீல்மேக்கரை வைத்து முயற்சிக்கலாம். சரியான விதத்தில் செய்தால் மீல் மேக்கரையே அசைவ உணவுகளை விட அட்டகாசமான சுவையில் செய்யலாம். இந்த பதிவில் இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு மீள மேக்கரை வைத்து எப்படி சூப்பரான சைடிஷ் செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

- மீல்மேக்கர் - 150 கிராம்
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
- மல்லித்தூள் - 3 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - ஒன்றரை ஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
- தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
- முந்திரிப்பருப்பு - 6
- உப்பு - தேவையான அளவு
- இஞ்சி - 1 துண்டு
- பூண்டு - 10 பல்
- பட்டை - 2 துண்டு
- கல்பாசி - 1 ஸ்பூன்
- கிராம்பு - 4
- சோம்பு - 1 ஸ்பூன்
தாளிப்பதற்கு:
பட்டை, சோம்பு, கறிவேப்பிலை - சிறிதளவு
வறுத்து அரைக்க:
- சின்ன வெங்காயம் - 15
- மிளகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- தக்காளி - 2
செய்முறை:
- தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மீல் மேக்கர், சிறிதளவு உப்பு சேர்த்து மூன்று நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின்பு தண்ணீரை வடிகட்டி பச்சைத் தண்ணீரில் இரண்டு தடவை அலசி தண்ணீரை நன்கு பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி ஆறவைத்து அதனுடன் தேங்காய் துருவல், முந்திரிப் பருப்பும், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- இஞ்சி, பூண்டு, பட்டை, சோம்பு ,கிராம்பு , கல்பாசி சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- குக்கரை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றி பட்டை, சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.
- அதனுடன் மல்லித்தூள் ,மிளகாய்த்தூள் ,மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
- பின்னர் அதனுடன் தக்காளியும் சேர்த்து சிறிது வதக்கி விட்டு மீல்மேக்கர் சேர்த்து அதையும் சிறிது வதக்கி விட்டு அரைத்து வைத்துள்ள மசாலா விழுது, தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்துவிட்டு குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கி மல்லி இலை தூவி கலந்து விட்டால் கறிக்குழம்பு ஸ்டைல் மீல்மேக்கர் கிரேவி ரெடி.
- இந்த கிரேவி சாதம், இட்லி, சப்பாத்தி என அனைத்திற்கும் சூப்பரா இருக்கும்.



Click it and Unblock the Notifications