Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
ஒருடைம் மசாலா டீயை இந்த பக்குவத்துல செஞ்சு குடிங்க.. அப்புறம் பாருங்க தினமும் செஞ்சு குடிப்பீங்க..
Masala Tea Recipe In Tamil: உலகில் காபி பிரியர்களைப் போன்றே, டீ பிரியர்களும் ஏராளம். இந்த டீ பிரியர்களால் ஒரு நாள் கூட டீ குடிக்காமல் இருக்க முடியாது. சிலருக்கு காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் டீ குடித்தால் தான், அந்த தினமே நன்றாக இருக்கும். அந்த அளவில் வெறித்தனமான டீ பிரியர்கள் எல்லாம் உள்ளனர்.
சிலர் தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை ஒரு டம்ளர் டீ குடித்து கொண்டாடுவார்கள். இப்படிப்பட்ட டீயில் பல வெரைட்டிகள் உள்ளன. டீத்தூள் இருந்தால் போதும் சூப்பர் டீ போட்டுவிடலாம் என்று நிறைய பேர் நினைக்கலாம். இன்னும் பலர் டீ போடுவதெல்லாம் ஒரு பெரிய மேட்டரே இல்லை என்று கூறலாம். ஆனால் உண்மையில் டீ போடவும் பக்குவம் உள்ளது.

அந்த பக்குவத்துடன் டீ போட்டால் தான், அந்த டீயைக் குடித்தால் புத்துணர்ச்சியான உணர்வைப் பெற முடியும். அதுவும் நீங்கள் டீ பிரியர் என்றால், நிச்சயம் மசாலா டீயை அடிக்கடி குடிக்க விரும்புவீர்கள். குறிப்பாக மழை நேரத்தில் ஒரு கப் மசாலா டீயைக் குடித்துக் கொண்டே மழையை ரசித்தால் அருமையாக இருக்கும். அப்படிப்பட்ட மசாலா டீயை பலவாறு போடலாம்.
உங்களுக்கு நல்ல பக்குவத்தில் மசாலா டீயை எப்படி போடுவதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா டீ ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புதினா இலை - 5
* சுருள் பட்டை - சிறிது
* கிராம்பு - 1
* மிளகு - 5
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* கருப்பு ஏலக்காய் - 1
* ஜாதிக்காய் - 1 சிட்டிகை
* தண்ணீர் - 2 கப்
* டீத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 1 3/4 டேபிள் ஸ்பூன்
* காய்ச்சிய பால் - 1 கப்
செய்முறை:
* முதலில் இடி உரலில் 5 புதினா இலைகள், சிறிய துண்டு சுருள் பட்டை,
1 கிராம்பு, 5 மிளகு, 1 சிறிய துண்டு இஞ்சி, 1 கருப்பு ஏலக்காயின்
விதைகளை சேர்த்து இடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைக்க
வேண்டும்.
* பின் அத்துடன் இடித்து வைத்துள்ளதை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் 1 டேபிள் ஸ்பூன் டீத்தூளை சேர்த்து கொதிக்க வைக்க
வேண்டும்
* நீரானது சற்று சுண்டியதும், அதில் 1 3/4 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை
சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* நீரானது 1 1/2 கப்பிற்கு வந்ததும், அதில் 1 கப் காய்ச்சிய பாலை
ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பால் ஊற்றிய பின் 2-3 நிமிடம் டீயை நன்கு கொதிக்க வைத்து இறக்கி
வடிகட்டினால், சுவையான மசாலா டீ தயார்.



Click it and Unblock the Notifications