Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
மழைக்கு வீட்டுல பொரி இருந்தா.. ஈவ்னிங் இப்படி மசாலா பொரி செஞ்சு கொடுங்க.. சூப்பரா இருக்கும்...
Masala Pori Recipe In Tamil: மழை பெய்யும் போது நிச்சயம் அனைவருக்கும் புளிப்பாக, காரமாக, மொறுமொறுப்பாக ஏதாவது சாப்பிடத் தோன்றும். குறிப்பாக சாட் சாப்பிட வேண்டுமென்று பலருக்கும் தோன்றலாம். ச
மீபத்தில் தான் ஆயுத பூஜை முடிந்தது என்பதால், நிச்சயம் அனைவரது வீட்டிலும் பொரி இருக்கும். அந்த பொரியை வெறுமனே சாப்பிடுவதற்கு பதிலாக, அதைக் கொண்டு மசாலா பொரி செய்து சாப்பிட்டால் இன்னும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு மசாலா பொரியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா பொரி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பொரி - 1/2 படி
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* கார்ன் ப்ளேக்ஸ் - தேவையான அளவு
* வேர்க்கடலை - 4 டேபிள் ஸ்பூன்
* பொட்டுக்கடலை - 4 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை - பாதி
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரியை சேர்த்து,
நன்கு வறுத்து ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி
சூடானதும், கார்ன் ப்ளேக்ஸை சேர்த்து பொரித்து, ஒரு தட்டில் எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் வேர்க்கடலையை சேர்த்து வறுத்து, அதை எடுத்து
பொரியுடன் சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் பொட்டுக்கடலையை சேர்த்து வறுத்து, அதை எடுத்து
பொரியுடன் சேர்க்க வேண்டும்.
* பின் அடுப்பை அணைத்துவிட்டு, கறிவேப்பிலை சேர்த்து பொரித்து,
அதையும் பொரியுடன் சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி
மற்றும் கொத்தமல்லியை சேர்க்க வேண்டும்.
* பிறகு சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள் மற்றும் எலுமிச்சை சாற்றினை
சேர்த்து நன்கு கலந்தால், சுவையான மசாலா பொரி தயார்.



Click it and Unblock the Notifications