Latest Updates
-
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்..
10 நிமிடத்தில் ருசியான மசாலா பாஸ்தா செய்வது எப்படி தெரியுமா?
பொதுவாக பாஸ்தா செய்வது மிகவும் சுலபம். அதுவும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே நல்ல அற்புதமான ருசியில் மசாலா பாஸ்தாவை செய்யலாம்.
உங்கள் வீட்டில் உள்ளோர் பாஸ்தாவை விரும்பி சாப்பிடுவார்களா? ஆனால் உங்களுக்கு நல்ல சுவையில் பாஸ்தா செய்யத் தெரியாதா? பொதுவாக பாஸ்தா செய்வது மிகவும் சுலபம். அதுவும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே நல்ல அற்புதமான ருசியில் மசாலா பாஸ்தாவை செய்யலாம். பாஸ்தாவை இன்னும் சத்தானதாக மாற்ற, அவற்றுடன் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். பாஸ்தாவை காலை உணவாக மட்டுமின்றி, இரவு உணவாகவும் சாப்பிலாம்.

உங்களுக்கு மசாலா பாஸ்தாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா பாஸ்தாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மக்ரோனி பாஸ்தா - 1 கப்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/4 கப் (நறுக்கியது)
* சிறிய கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் தக்காளியை நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் பாஸ்தாவை சேர்த்து, சிறிது உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, பாஸ்தாவை மென்மையாக வேக வைக்க வேண்டும்.
* பாஸ்தா வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அதில் உள்ள அதிகப்படியான நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு மற்றும் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* பின் கேரட்டை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அரைத்த தக்காளியை சேர்த்து, மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் குடைமிளகாயை சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* இறுதியாக வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளறி இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மசாலா பாஸ்தா தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
