Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
மதியம் மீந்து போன சாதம் இருக்கா? 3 முட்டை வெச்சு.. இப்படியொரு ரைஸ் செய்யுங்க.. பிரியாணியே தோத்துப்போயிடும்..
Masala Egg Rice Recipe In Tamil: உங்கள் வீட்டில் மதியம் சமைத்த சாதம் நிறைய உள்ளதா? இரவு நேரத்தில் அந்த சாதத்திற்கு சைடு டிஷ் எதுவும் இல்லையா? உங்கள் வீட்டில் முட்டை உள்ளதா? அப்படியானால் அந்த முட்டைகளைக் கொண்டு அருமையான சுவையில் மசாலா முட்டை சாதத்தை செய்யுங்கள்.
இந்த மசாலா முட்டை சாதமானது பிரியாணியின் சுவையையே தோற்கடிக்கும் வகையில் அவ்வளவு ருசியாக இருக்கும். உங்கள் குழந்தைகள் வாய்க்கு ருசியாக திடீரென்று ஏதாவது செய்து கொடுக்குமாறு கேட்டால், இந்த மசாலா முட்டை சாதத்தை செய்து கொடுங்கள். அதுவும் இந்த முட்டை சாதத்தை ஒருமுறை செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு மசாலா முட்டை சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா முட்டை சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 2
* பிரியாணி இலை -1
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 1
* பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்
* முட்டை - 3
* சாதம் - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, அன்னாசிப்பூ, ஏலக்காய்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, கறிவேப்பிலை
தூவி, உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள் மற்றும் பிரியாணி மசாலாவை சேர்த்து
குறைவான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு பொடிமாஸ் போன்று
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மீந்து போன சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* மசாலா அனைத்தும் சாதத்துடன் ஒன்று சேர்ந்ததும், அதில்
கொத்தமல்லியைத் தூவி, மிளகுத் தூளை மேலே தூவி நன்கு கிளறி இறக்கினால்,
சுவையான மசாலா முட்டை சாதம் தயார்.



Click it and Unblock the Notifications