Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
முட்டையை இந்த மாதிரி தோசைக்கல்லில் மசாலா ப்ரை பண்ணுங்க... சாதத்தோட சாப்பிட சூப்பரான சைடிஷா இருக்கும்...!
Masala Egg Fry Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை செய்வீர்களா? எப்போது முட்டையை ஒரே சுவையில் தான் செய்வீர்களா? இப்படி ஒரே மாதிரி செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் முட்டையை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த மசாலா முட்டை வறுவலை செய்யுங்கள்.
அதுவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டைலில் முட்டையை வறுவலை செய்யும் போது அதன் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும். மேலும் இந்த பக்குவத்தில் முட்டை வறுவலை செய்தால் சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இது முட்டை சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு காரசாரமான மசாலா முட்டை வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா முட்டை வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 3 வேகவைத்த முட்டைகள்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- அரை ஸ்பூன் சீரகத் தூள்
- அரை ஸ்பூன் கொத்தமல்லி தூள்
- கால் ஸ்பூன் கரம் மசாலா தூள்
- ஒரு சிட்டிகை மிளகுத்தூள்
- தேவையான அளவு உப்பு
- கறிவேப்பிலை சிறிதளவு
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை:
- முட்டைகளை கொதிக்கும் நீரில் சரியாக 12 நிமிடங்கள் வேக வைக்கவும். அடுப்பை அணைத்து, குளிர்ந்த நீரில் போட்டு, சில நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு முட்டைகளை உரித்து வைக்கவும்.
- முட்டைகளை இரண்டாக வெட்டி வைக்கவும்.
- ஒரு கடாய் அல்லது தோசைக்கல்லில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெயை சூடாக்கவும், அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
- எண்ணெய் சூடானதும் ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள், ½ டீஸ்பூன் கொத்தமல்லி தூள், ½ டீஸ்பூன் சீரகத் தூள், ½ டீஸ்பூன் கரம் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- மசாலாக்கள் கருகி விடமால் அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கலக்கவும். எண்ணெய் மசாலா கலவை தயார்.
- நறுக்கிய முட்டைகளை, மஞ்சள் கரு பகுதி கீழே இருக்கும்படி ஒவ்வொன்றாக வைக்கவும்.
- ஒரு நிமிடம் வேகவைத்து, பின்னர் மறுபுறம் திருப்பிப் போடவும்.
- மசாலா எண்ணெயை முட்டைகளின் மீது தெளிக்கவும்.
- ஒரு நிமிடம் கழித்து ஒரு சிட்டிகை மிளகுத் தூளை முட்டையின் மீது சேர்க்கவும்.
- இறுதியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை தூவி கிளறினால் மசாலா முட்டை பொரியல் ரெடி!
- இந்த மசாலா முட்டை பொரியல் சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications