Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
மரவள்ளிக்கிழங்கு வாங்குனா.. இப்படி ஒருடைம் செய்யுங்க.. குழந்தைங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Maravalli Kizhangu Cake Recipe In Tamil: தற்போது மரவள்ளிக்கிழங்கு சீசன். இந்த சீசன் இருக்கும் போதே அதை வாங்கி சாப்பிட்டு, அதன் சத்துக்களைப் பெறுங்கள். ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் மரவள்ளிக்கிழங்கை சாப்பிடமாட்டார்களா? அப்படிப்பட்டவர்கள் மரவள்ளிக்கிழங்கை சாப்பிட வைக்க வேண்டுமா?
அப்படியானால் கிழங்கை வெறுமனே வேக வைத்து கொடுக்காமல், அந்த கிழங்கைக் கொண்டு வித்தியாசமான ரெசிபிக்களை செய்து கொடுங்கள். அதுவும் குழந்தைகளை மரவள்ளிக்கிழங்கு சாப்பிட வைக்க வேண்டுமானால், அதைக் கொண்டு கேக் செய்யுங்கள். இப்படி கேக் செய்யும் போது, அது குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு மரவள்ளிக்கிழங்கு கேக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மரவள்ளிக்கிழங்கு கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 15
* உலர் திராட்சை - 15
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* சர்க்கரை - 50 கிராம்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 2 சிட்டிகை
செய்முறை:
* முதலில் மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அவற்றை துருவிக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
பொடியாக நறுக்கிய முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் துருவி வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* பிறகு ஒரு அடி தட்டையான பாத்திரத்தை எடுத்து, அதனுள் ஒரு வாழை இலையை
வைத்து, மேலே நெய் தடவி, வதக்கி வைத்துள்ள கலவையை போட்டு
அழுத்திவிடாமல், தட்டையாக பரப்பி சமப்படுத்தி மூடிவிட வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தினுள் அந்த பாத்திரத்தை வைத்து மூடி,
மிதமான தீயில் வைத்து 15-20 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* பின் அதன் ஓரங்களை கத்தியால் கீறிவிட்டு, குப்புறப் போட்டு
தட்டினால், சுவையான மரவள்ளிக்கிழங்கு கேக் தயார்.



Click it and Unblock the Notifications











