Latest Updates
-
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா?
சாதத்துக்கு அட்டகாசமாக இருக்கும்... மன்னார்குடி மாவத்த குழம்பு
Mannargudi Maavatha Kuzhambu: ஒவ்வொரு நாளும் என்ன சமையலை செய்வதென்று தெரியாமல் பலரும் யோசித்து, கடைசியில் எப்போதும் போல சாம்பாரை வைத்துவிட்டு செல்வோம். ஆனால் நீங்கள் அடிக்கடி உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான ரெசிபியை செய்து கொடுக்க விரும்புவீர்களா?
அப்படியானால் மாவத்தல் கொண்டு ஒரு அட்டகாசமான குழம்பு செய்யுங்கள். இந்த மன்னார்குடி ஸ்டைலில் மாவத்த குழம்பு செய்து, உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்துங்கள். இந்த மாவத்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு மாவத்த குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாவத்த குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மாவத்தல் - 10 துண்டு
* சின்ன வெங்காயம் - 1 கப் (தோலுரித்தது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* வெந்தயத் தூள் - 1 சிட்டிகை
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* புளிச்சாறு - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் மாவத்தலை ஒரு கப் சுடுநீரில் 20 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு சின்ன வெங்காயத்தை சேர்த்து குறைவான தீயில் வைத்து சிறிது
நேரம் வதக்க வேண்டும்.
* அடுத்து ஊற வைத்துள்ள மாவத்தல் நீரை தூக்கி எறிந்துவிடாமல் தனியாக
எடுத்து வைத்துக் கொண்டு, மாதுண்டுகளை வாணலியில் சேர்த்து 2 நிமிடம்
வதக்க வேண்டும்.
* பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், வெந்தயப் பொடி
சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து,
மாவத்தல் ஊற வைத்த நீரை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து நன்கு
கொதிக்க வைத்து, மேலே கறிவேப்பிலையைத் தூவி இறக்கினால், சுவையான
மன்னார்குடி மாவத்த குழம்பு தயார்.
குறிப்பு:
* குழம்பு நல்ல நிறத்தில் இருக்க வேண்டுமானால், காஷ்மீரி மிளகாய்
தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* குழம்பு இன்னும் நல்ல சுவையுடன் இருக்க வேண்டுமானால், 1/2 கப்
தேங்காயை அரைத்து பேஸ்ட் செய்து சேர்த்து கொதிக்க வைத்து
இறக்குங்கள்.
Image Courtesy: kalaskalai



Click it and Unblock the Notifications