Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
மஞ்சள் பூசணியை இந்த மாதிரி பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Manjal Poosanikai Poriyal Recipe In Tamil: தற்போது மஞ்சள் பூசணி சீசன் என்பதால் மார்கெட்டுகளில் இந்த காயை அதிகம் காணலாம். மஞ்சள் பூசணி ஏராளமான நுண்சத்துக்களைக் கொண்டது. இந்த சீசன் இருக்கும் போதே அடிக்கடி வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.
ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் மஞ்சள் பூசணியை விரும்பமாட்டார்களா? இதற்கு அதன் இனிப்புச் சுவை தான் காரணமா? அப்படியானால் மஞ்சள் பூசணியை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்கள். இப்படி பொரியல் செய்யும் போது, அனைத்து விதமான உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு மஞ்சள் பூசணி பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மஞ்சள் பூசணி பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மஞ்சள் பூசணிக்காய் - 400 கிராம்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
* பச்சை மிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 12 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 கைப்பிடி
* துருவிய தேங்காய் - 1 கைப்பிடி
செய்முறை:
* முதலில் மஞ்சள் பூசணியின் தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு,
சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு
கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு நறுக்கி வைத்துள்ள பூசணிக்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். உப்பு
சேர்க்கும் போது வழக்கமாக மற்ற காய்களுக்கு சேர்ப்பதை விட குறைவாக
சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் 2 கைப்பிடி நீரை தெளித்து கிளறி, மூடி வைத்து
மிதமான தீயில் வைத்து 8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 8 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கிளறி, துருவிய தேங்காயை
சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான மஞ்சள் பூசணிக்காய்
பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications