Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
பொங்கலுக்கு வாங்குன மஞ்சள் கிழங்கு இருந்தா அதை வேஸ்ட் பண்ணாம இந்த மாதிரி தொக்கு செய்யுங்க..தெருவே மணக்கும்...!
Manjal Kilangu Thokku Recipe in Tamil: பொங்கல் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து வீடுகளிலும் பொங்கல் வைப்பதற்கு நிச்சயம் மஞ்சள் கிழங்கு வாங்கியிருப்போம். ஆனால் பொங்கல் முடிந்த பிறகு அந்த மஞ்சள் கிழங்கை நாம் தூக்கித்தான் எறிவோம். நகரங்களில் மட்டுமல்ல கிராமத்தில் கூட இந்த மஞ்சள் கிழங்கை தூக்கித்தான் எறிவார்கள்.
இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள். இந்த மஞ்சள் கிழங்கை வைத்து சூப்பரான அதேசமயம் ஆரோக்கியமான தொக்கை செய்யலாம். இந்த தொக்கை ஊறுகாய் போல மாதக்கணக்கில் வைத்து கூட சாப்பிடலாம். இந்த தொக்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி வயிற்றுப்புண், செரிமான பிரச்சினைகள் அஜீரணக் கோளாறு போன்ற பல பிரச்சினைகளை குணப்படுத்தும்.

உங்களுக்கு மஞ்சள் கிழங்கை வைத்து சூப்பரான தொக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மஞ்சள் கிழங்கு தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- மஞ்சள் கிழங்கு - 1 கொத்து
- மல்லி விதை - 1 ஸ்பூன்
- வெந்தயம் - கால் ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- பெருங்காயம் - கால் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- நாட்டு சர்க்கரை - 1 ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
- முதலில் மஞ்சள் கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவி வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் மஞ்சள் கிழங்கை கேரட் போல துருவி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் மல்லி விதை மற்றும் வெந்தயம் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் ஒரு ஸ்பூன் கடுகு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து வறுக்கவும். பின்னர் இதை ஆற வைத்து ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் துருவிய மஞ்சள் கிழங்கு சேர்த்து வதக்கவும்.
- பின்னர் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- எண்ணெய் பிரிந்து வரும் போது அதில் அரைத்து வைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறவும்.
- இறுதியாக ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கிளறினால் தெருவே மணக்கும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பச்சை மஞ்சள் தொக்கு ரெடி.



Click it and Unblock the Notifications