Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மாம்பழ சர்பெட்
உங்கள் வீட்டில் மாம்பழங்கள் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு குளிர்ச்சியான மற்றும் ஐஸ் க்ரீம் போன்ற ஒரு ரெசிபியை வீட்டிலேயே எளிதில் செய்து சாப்பிடலாம். அது தான் மாம்பழ சர்பெட்.
கொளுத்தும் வெயிலில் நன்கு ஜில்லென்று ஏதாவது சாப்பிட வேண்டுமென்று தோன்றும். ஆனால் வீட்டில் எப்போதும் ஐஸ் க்ரீம் ஸ்டாக் வைத்துக் கொள்ள முடியாது அல்லவா? இந்நிலையில் உங்கள் வீட்டில் மாம்பழங்கள் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு குளிர்ச்சியான மற்றும் ஐஸ் க்ரீம் போன்ற ஒரு ரெசிபியை வீட்டிலேயே எளிதில் செய்து சாப்பிடலாம். அது தான் மாம்பழ சர்பெட். இந்த மாம்பழ சர்பெட் செய்வது மிகவும் சுலபம். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு மாம்பழ சர்பெட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாம்பழ சர்பெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நன்கு கனிந்த மாம்பழங்கள் - 3 கப் (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 1/3 கப் அல்லது தேவையான அளவு
* புதினா இலைகள் - ஒரு கையளவு
செய்முறை:
* முதலில் மாம்பழங்களை துண்டுகளாக்கி ஜிப்லாக் பேக்கில் போட்டு, ஃப்ரீசரில் வைத்து நன்கு உறைய வைக்க வேண்டும்.
* மாம்பழத் துண்டுகள் நன்கு உறைந்ததும், அதை பிளெண்டரில் போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு, புதினா, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அப்படி அரைக்கும் போது, அது கெட்டியாகவும், க்ரீமியாக ஐஸ்க்ரீம் போன்று இருக்கும்.
* இப்போது அதை ஒரு பௌலில் எடுத்து வைத்து உடனே பரிமாறுங்கள் அல்லது அதை ஒரு கண்டெய்னரில் போட்டு ஃப்ரீசரில் 30 நிமிடம் வைத்து பின் அதை வெளியே எடுத்து 10 நிமிடங்கள் கழித்து பரிமாறுங்கள்.
குறிப்பு:
* மாம்பழங்களை நன்கு உறைய வைத்து செய்தால் தான் சர்பெட் நன்கு க்ரீமியாக இருக்கும்.
* மாம்பழ துண்டுகளை ஜிப்லாக் பேக்கில் போட்டு வைத்துக் கொண்டால், அதை 1 மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்.
* சர்பெட்டை ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம். ஆனால் பரிமாறுவதற்கு 10 நிமிடத்திற்கு முன்னரே வெளியே எடுத்து வைத்து விடுங்கள்.
* உங்கள் வீட்டில் ஏற்கனவே உறைய வைக்கப்பட்ட மாம்பழத் துண்டுகள் இருந்தால், இந்த சர்பெட்டை நிமிடத்தில் செய்து சாப்பிடலாம்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
