Latest Updates
-
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
உங்க வீட்ல மாங்காய் இருக்கா? அப்ப இந்த மாதிரி செஞ்சு பாருங்க... டேஸ்ட் சும்மா அட்டகாசமா இருக்கும்...!
Mango Rice Recipe in Tamil: கோடைகாலம் வந்து விட்டாலே சுட்டெரிக்கும் வெயிலையும் தாண்டி அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது மாம்பழம்தான். இந்த பருவகால பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருப்பதுடன் அளவிலா சுவையையும் கொண்டுள்ளது. மாம்பழம் ஒரு வகையான சுவை என்றால் மாங்காய் ஒரு விதமான சுவை கொண்டது. மாங்காயுடன் உப்பு, மிளகாய்த்தூள் வைத்து சாப்பிட பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
மாங்காயை பொதுவாக பச்சையாக சாப்பிடுவார்கள் அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிடுவார்கள், ஆனால் மாங்காயை வைத்தே ஒரு சுவையான சாதத்தை செய்யலாம். காரம், புளிப்பு மற்றும் துவர்ப்பு என அனைத்து வகையான சுவையும் இந்த சாதத்தில் நிறைந்திருக்கும்.

இந்த சாதத்தை குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் செய்து கொடுக்கலாம். சீசன் இருக்கும் போதே இந்த சூப்பரான சாதத்தை செய்து கொடுத்து எல்லோரையும் அசத்துங்கள். இந்த பதிவில் சுவையான மாங்காய் சாதத்தை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- 2 கப் அரிசி
- 1 பச்சை மாங்காய் (புளிப்பு, நடுத்தர அளவு)
- 1 கொத்து கறிவேப்பிலை
- 4 நறுக்கிய பச்சை மிளகாய்
- 2 வர மிளகாய்
- கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
- ¼ கப் வேர்க்கடலை
- உப்பு தேவையான அளவு
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 1 ஸ்பூன் கடுகு
- 1 துண்டு நறுக்கிய இஞ்சி
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 1 சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- முதலில் அரிசியை நன்றாக கழுவி சாதமாக வேகவைத்துக் கொள்ளவும். சாதம் உதிரியாக இருந்தால் சாப்பிட மேலும் நன்றாக இருக்கும்.
- சாதம் வெந்ததும் ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தனியாக வைத்துக் கொள்ளவும்.
- அதே நேரத்தில் மாங்காயை நன்றாக கழுவி துருவி வைத்துக் கொள்ளவும். இல்லயெனில் மாங்காயை வேகவைத்து தோலை உரித்து விட்டு கூழாக மசித்தும் பயன்படுத்தலாம்.
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, வேர்க்கடலையை மிதமான தீயில் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். பின்னர் அவற்றை ஒரு தட்டிற்கு மாற்றி வைக்கவும்.
- பின்னர் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் அதில், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வர மிளகாய் சேர்க்கவும்.
- பருப்பு வகைகள் பொன்னிறமாக மாறியதும், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். கறிவேப்பிலை மொறுமொறுப்பாகும் வரை வதக்கவும், பின்னர் துருவிய இஞ்சி சேர்க்கவும். பின்னர் வேர்க்கடலையை சேர்க்கவும். இறுதியாக ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கவும்.
- பின்னர் மாங்காய், உப்பு மற்றும் மஞ்சள் சேர்க்கவும். 2 முதல் 3 நிமிடங்கள் வதக்கவும். மாங்காய் முற்றிலும் மென்மையாக கூழ் போல மாறும் வரை வதக்கவும். வேகவைத்த மாங்காய் சேர்த்தால் இது தேவையற்றது.
- பின்னர் இந்த கலவையை சமைத்த சாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கலக்கத் தொடங்குங்கள். உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பை சரி செய்யவும்.
- சூப்பரான மாங்காய் சாதம் ரெடி. காரமான உருளைக்கிழங்கு அல்லது அப்பளத்துடன் இதை சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications