Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
சன்டே ஸ்பெஷல்: மங்களூரியன் சிக்கன் நெய் ரோஸ்ட்
Mangalorean Chicken Ghee Roast: இந்த வாரம் வீட்டில் ஸ்பெஷலாக என்ன சமைத்து சாப்பிடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கப் போகிறீர்களா? அப்படியானால் சன்டே ஸ்பெஷலாக மங்களூரியன் சிக்கன் நெய் ரோஸ்ட் செய்யுங்கள்.
இந்த நெய் ரோஸ்ட் வித்தியாசமான சுவையுடன், சாதம், சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். முக்கியமாக இதை செய்வது மிகவும் ஈஸி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு மங்களூரியன் சிக்கன் நெய் ரோஸ்ட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மங்களூரியன் சிக்கன் நெய் ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ (சிறு துண்டுகளாக வெட்டப்பட்டது)
* தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
நெய் ரோஸ்ட் மசாலாவிற்கு...
* வரமிளகாய் - 6
* மிளகு - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* மல்லி - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 4
* புளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவி, நீரை முற்றிலும்
வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு,
சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் கழுவிய சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி,
குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், வெந்தயம்,
சீரகம், மல்லி, கிராம்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து குறைவான தீயில்
வைத்து நன்கு மணம் வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் பூண்டு மற்றும் புளி
பேஸ்ட் சேர்த்து 1 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி நன்கு பேஸ்ட் போல்
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து
நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள நெய் ரோஸ்ட் மசாலாவை சேர்த்து
நன்கு கிளறி, நெய் தனியே பிரிந்து மேலே மிதக்கும் வரை வேக வைக்க
வேண்டும்.
* இறுதியாக அதில் வெல்லம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி,
இறக்கினால், சுவையான மங்களூரியன் சிக்கன் நெய் ரோஸ்ட் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications