Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சன்டே ஸ்பெஷல்: மங்களூர் ஸ்டைல் சிக்கன் குழம்பு
Mangalore Style Chicken Kuzhambu: இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சிக்கனைக் கொண்டு இதுவரை முயற்சிக்காத ஒரு வித்தியாசமான ரெசிபியை செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் மங்களூர் ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்து சாப்பிடுங்கள்.
இந்த குழம்பானது ஈஸியான செய்முறையை கொண்டிருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு மங்களூர் ஸ்டைல் சிக்கன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மங்களூர் ஸ்டைல் சிக்கன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 கிலோ
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* கெட்டியான தேங்காய் பால் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு...
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல்
* தேங்காய் - 1/2 கப் (துருவியது)
* வரமிளகாய் - 7-8 (விதைகள் நீக்கப்பட்டது)
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 3/4 டீஸ்பூன்
* மல்லி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கிராம்பு - 3
* பட்டை - 1 துண்டு
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிவிட்டு, மஞ்சள் தூள் மற்றும் 1/2
டீஸ்பூன் உப்பு சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயம், பூண்டு
மற்றும் தேங்காயைத் தவிர, மசாலாவிற்கு கொடுத்துள்ள மற்ற அனைத்து
பொருட்களையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் சிறிது நெய் ஊற்றி சூடானதும், வெங்காயம்,
பூண்டு சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தேங்காயை சேர்த்து 5 நிமிடம்
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் மற்றும் வதக்கிய வெங்காயத்தை
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயத்தைப் போட்டு நிறம் மாறும் வரை வதக்கி, பின்
சிக்கனை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து மூடி வைத்து 10
நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதல் அரைத்து வைத்துள்ள மசாலா, கறிவேப்பிலை மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மீண்டும் மூடி வைத்து குறைவான
தீயில் வைத்து 8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் 3 கப் நீரை ஊற்றி, புளிச்சாற்றினை சேர்த்து உயர்
தீயில் வைத்து 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் தீயைக்
குறைத்து மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, தேங்காய் பாலை ஊற்றி கிளறி இறக்கினால்,
சுவையான மங்களூர் ஸ்டைல் சிக்கன் குழம்பு தயார்.
Image Courtesy: sailusfood



Click it and Unblock the Notifications