Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மங்களூர் நெய் சிக்கன் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க, வேற லெவல் சைடிஷா இருக்கும்
Mangalore Chicken Sukka Recipe in Tamil: சண்டே வந்தாலே சிக்கன் சாப்பிட வேண்டுமென்பது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி சமைக்கப் போகிறீர்களா? வழக்கமான சிக்கன் செய்யாமல் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான சிக்கன் சைடு டிஷ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் மங்களூர் ஸ்டைல் சிக்கன் சுக்காவை செய்யுங்கள்.

இந்த மங்களூர் ஸ்டைல் சிக்கன் சுக்கா சாதம், பிரியாணி மட்டுமின்றி தோசை, சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த சிக்கன் ஹோட்டல்களில் சாப்பிடுவது போல அட்டகாசமான சுவையில் இருக்கும், எனவே இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.
உங்களுக்கு மங்களூர் ஸ்டைல் சிக்கன் சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மங்களூர் சிக்கன் சுக்காவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கிலோ சிக்கன்
- 4 ஸ்பூன் நெய்
- 1 கப் வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 5-6 பூண்டுப் பல்
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 ஸ்பூன் புளிக்கரைசல்
எண்ணெய் இல்லாமல் வறுக்க:
- 1 ஸ்பூன் சீரகம்
- ஒன்றரை கப் புதிய தேங்காய் (துருவியது)
- 10 பூண்டு பல்
நெய்யில் வறுப்பதற்கு:
- 2 ஸ்பூன் நெய்
- 3 ஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
- 1 ஸ்பூன் கசகசா
- ¼ ஸ்பூன் வெந்தய விதைகள்
- 1 இன்ச் இலவங்கப்பட்டை
- 1 ஸ்பூன் கருப்பு மிளகு
- 4 கிராம்பு
- 20 காஷ்மீரி சிவப்பு மிளகாய்
- 10 குண்டூர் சிவப்பு மிளகாய்
தாளிக்க:
- 2 ஸ்பூன் நெய்
- ¼ கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
செய்முறை:
- முதலில் ஒரு கடாயில் சீரகம், துருவிய தேங்காய் மற்றும் 10 பல் பூண்டு ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றி ஆற வைக்கவும்.
- பின்னர் ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி நெய்யில் வறுக்க கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். இவற்றின் நிறம் மாறி வாசனை வரும் வரை வதக்கவும்.
- இந்த பொருட்களையும் தட்டுக்கு மாறி ஆற வைக்கவும்.
- எண்ணெய் இல்லாமல் வறுத்த பொருட்களை ஒரு மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் மென்மையான தூளாக அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.
- பின்னர் நெய்யில் வறுத்த பொருட்களை ஒரு மிக்சி ஜாரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதையும் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் 4 ஸ்பூன் நெய்யை ஊற்றி சூடுபடுத்தவும். நெய் சூடானதும், வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி போன்ற பதம் வரும்வரை வறுக்கவும்.
- பின்னர் கழுவி வைத்த சிக்கனைச் சேர்த்து, அதிகத் தீயில் 3 முதல் 4 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் நெய்யில் வறுத்த மசாலா விழுதை, ஒரு கோப்பை நீர் மற்றும் உப்புடன் சேர்த்து, மூடி வைத்து சிக்கனை முக்கால் பதத்திற்கு வேக விடவும்.
- இப்போது, எண்ணெய் சேர்க்காமல் வறுத்த மசாலாப் பொடியைச் சேர்த்து, சிக்கன் முழுமையாக வெந்து மசாலா கெட்டியாகும் வரை நன்றாக வேக வைக்கவும்.
- பின்னர் புளி மற்றும் மஞ்சள் தூளைச் சேர்த்து, 3 முதல் 4 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- ஒரு கடாயில் தாளிப்பதற்குத் தேவையான நெய்யைச் சூடுபடுத்தவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
-இந்த தாளிப்பை சிக்கன் மீது கொட்டி நன்றாக கிளறவும். அவ்வளவுதான் சூப்பரான மங்களூர் ஸ்டைல் சிக்கன் சுக்கா ரெடி!



Click it and Unblock the Notifications