Latest Updates
-
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்!
மங்களூர் ஸ்பெஷல் சிக்கன் நெய் ரோஸ்ட் ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க..பிரியாணி கூட சாப்பிட சூப்பரா இருக்கும்!
Mangalore Chicken Ghee Roast Recipe in Tamil: வார இறுதி நாட்கள் வந்தாலே பெரும்பாலான மக்கள் அசைவ உணவை நோக்கித்தான் படையெடுப்பார்கள். சண்டே மட்டுமே அசைவம் சாப்பிட வேண்டுமென்கிற காலம் எப்போதே மலையேறி விட்டது.
கடந்த காலங்களில் சண்டே மட்டுமே அசைவத்துக்கான நாளாக இருந்ததற்கு காரணம் அன்று மட்டுமே நிதானமாக சமைக்க நேரம் இருக்கும் என்பதால்தான். ஆனால் 24 மணி நேரமும் அசைவ உணவுகள் கிடைக்கும் கடைகளும் பெருகிவிட்டன, அதில் எப்போதும் கூட்டமாக சாப்பிட வாடிக்கையாளர்களும் பெருகிவிட்டனர்.

ஹோட்டல்கள் பட்ஜெட்டை பதம் பார்க்கும் போது வீட்டிலேயே சுவையான சிக்கனை விரைவாக செய்யலாம். வழக்கமான சிக்கன் மசாலா மற்றும் வறுவல் சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு மங்களூர் ஸ்பெஷல் சிக்கன் நெய் ரோஸ்ட் புதுவிதமான சுவையைக் கொடுக்கும். இந்த பதிவில் கர்நாடகா முழுவதும் பிரபலமான மங்களூர் ஸ்பெஷல் நெய் சிக்கன் ரோஸ்ட்டை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட சிக்கன் - 1/2 கிலோ
- எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
- நெய் - 3 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- வெல்லம் - 1 டீஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
நெய் ரோஸ்ட் மசாலா தயாரிக்க:
- புளிக்கரைசல் - 1 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் - அரை ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- மல்லி விதை - 2 டீஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- வரமிளகாய் - 6
- கிராம்பு - 2
- பூண்டு - 4
செய்முறை :
- முதலில் சிக்கனை மஞ்சள் கலந்த நீரில் நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
- பின் அதில் கழுவிய சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
- பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், வெந்தயம், சீரகம், மல்லி, கிராம்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்கு மணம் வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
- பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் பூண்டு மற்றும் புளிச்சாறு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.
- அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள நெய் ரோஸ்ட் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, நெய் தனியே பிரிந்து மேலே மிதக்கும் வரை வேக வைக்க வேண்டும்.
- இறுதியாக அதில் வெல்லம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, இறக்கினால், சுவையான மங்களூர் சிக்கன் நெய் ரோஸ்ட் ரெடி.
- இது பிரியாணி, புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
- இதே பாணியில், இறாலை வைத்து மங்களூர் இறால் நெய் ரோஸ்ட் செய்யலாம்.



Click it and Unblock the Notifications