Latest Updates
-
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
மாங்காய் சீசன் இருக்கும் போதே.. இந்த ரசத்தை செஞ்சு சாப்பிடுங்க.. சும்மா அல்டிமேட்டா இருக்கும்...
Mangai Rasam Recipe In Tamil: கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டதால், மாங்காய் சீசனும் வந்துவிட்டது. மார்கெட்டுகளில் விலைக் குறைவில் பல வகையான மாம்பழங்கள் மற்றும் மாங்காய் விற்பதைக் காணலாம். அதுவும் நீங்கள் மாங்காய் பிரியர் என்றால் நிச்சயம் இந்த சீசனில் அடிக்கடி மாங்காயை வாங்கி சாப்பிடுவீர்கள். மேலும் வீட்டில் எப்போதும் மாங்காய் இருந்தவாறு இருக்கும்.
இதுவரை நீங்கள் மாங்காயை வெறுமனே அல்லது சாம்பாரில் மட்டும் தான் சேர்த்து சாப்பிட்டுள்ளீர்கள் என்றால், அடுத்தமுறை மாங்காயைக் கொண்டு ரசம் செய்யுங்கள். இந்த மாங்காய் ரசம் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். முக்கியமாக இந்த ரசத்திற்கு புளி, தக்காளி என்று எதுவுமே தேவையில்லை. இதனால் இந்த ரசத்தை கோடையில் அடிக்கடி செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

உங்களுக்கு மாங்காய் ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாங்காய் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மாங்காய் - 1
* பச்சை மிளகாய் - 3
* இஞ்சி - 1 இன்ச்
* ஊற வைத்த துவரம் பருப்பு - 1 கப்
* தண்ணீர் - 3/4 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காய் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பூண்டு - 5 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* ரசப்பொடி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 3 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மாங்காயின் தோலை நீக்கிவிட்டு, அதை துண்டுகளாக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மாங்காய், பச்சை மிளகாய்,
தட்டி வைத்துள்ள இஞ்சி, ஊற வைத்துள்ள துவரம் பருப்பு, தண்ணீர் மற்றும்
மஞ்சள் தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 விசில்
விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பையும், மாங்காயையும்
மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், வரமிளகாய்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்கள் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் ரசப்பொடியை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பிறகு வேக வைத்து மசித்து வைத்துள்ள மாங்காய் மற்றும் பருப்பை
சேர்த்து, அத்துடன் ரசத்திற்கு தேவையான அளவு 3 கப் நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பை சேர்த்து, கொதிக்க விடாமல், நுரைக்கட்டி வந்ததும்,
அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான மாங்காய் ரசம்
தயார்.



Click it and Unblock the Notifications










