Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
மணமணக்கும்.. காரசாரமான.. மணப்பட்டி சிக்கன் சுக்கா - எப்படி செய்யணும் தெரியுமா?
Manapatti Chicken Sukka Recipe In Tamil: இன்று உங்கள் சிக்கன் வாங்கியுள்ளீர்களா? அந்த சிக்கனைக் கொண்டு சற்று வித்தியாசமான ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் இன்று மணப்பட்டி ஸ்பெஷல் சிக்கன் சுக்காவை செய்யுங்கள். இந்த மணப்பட்டி சிக்கன் சுக்கா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவை மிகவும் அட்டகாசமாகவும் இருக்கும்.
முக்கியமாக இந்த சிக்கன் சுக்காவானது ரசம் சாதத்துடன் சாப்பிட இன்னும் அருமையாக இருக்கும். இந்த சிக்கன் சுக்காவிற்கு நிறைய மசாலா தேவையில்லை. ஒருசில மசாலாக்களே போதுமானது. ஒருமுறை இந்த சிக்கன் சுக்காவை செய்தால், பின் அடிக்கடி வீட்டில் உள்ளோர் செய்ய சொல்வார்கள். அந்த அளவில் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு மணப்பட்டி சிக்கன் சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மணப்பட்டி சிக்கன் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 கிலோ
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 சிறிய துண்டு (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பூண்டு - 10 பல் (தட்டிக் கொள்ளவும்)
* முந்திரி - 25 கிராம்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிக்கனை சேர்த்து,
சிக்கன் நீர் விட்டு வரும் வரை வேக வைக்க வேண்டும்.
* சிக்கனில் இருந்து நீர் வெளியே வந்ததும், அந்த நீரை எடுத்துவிட்டு,
பின் அதில் நல்லெண்ணெயை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், வரமிளகாய், மிளகாய் தூள் மற்றும் துருவிய
இஞ்சியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட
வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் சீரகத் தூள் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பிறகு பூண்டு பற்களை தட்டி சேர்த்து நன்கு 3 நிமிடம் கிளறி விட்டு,
முந்திரியைத் தூவி 3 நிமிடம் நன்கு வதக்கி இறக்கினால், சுவையான
மணப்பட்டி சிக்கன் சுக்கா தயார்.



Click it and Unblock the Notifications