Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
மலபார் மட்டன் ரோஸ்ட்
நீங்கள் பல்வேறு வகையான மட்டன் ரெசிபிக்களை உங்கள் வீடுகளில் செய்து சுவைத்திருக்கலாம். ஆனால் மலபார் மட்டன் ரோஸ்ட் அற்புதமான சுவையில் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.
தென்னிந்திய உணவுகளில் மலபார் ரெசிபிக்கள் பிரபலமானவை. அதில் ஒன்று தான் மலபார் மட்டன் ரோஸ்ட். நீங்கள் பல்வேறு வகையான மட்டன் ரெசிபிக்களை உங்கள் வீடுகளில் செய்து சுவைத்திருக்கலாம். ஆனால் மலபார் மட்டன் ரோஸ்ட் அற்புதமான சுவையில் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு மலபார் மட்டன் ரோஸ்ட் எப்படி செய்வதென்று தெரிந்து கொக்க வேண்டுமா? கீழே மலபார் மட்டன் ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 600 கிராம்
* வெங்காயம் - 1 (அரைத்தது)
* தக்காளி - 1 (அரைத்தது)
* இஞ்சி பூண்டு விழுது - 2 டீபூன்
* மிளகாய் தூள் - 2 டீபூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீபூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
மசாலாவிற்கு...
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* வரமிளகாய் - 3
* கறிவேப்பிலை - சிறிது
* சீரகப் பொடி - 2 டீபூன்
* வெந்தயம் - 1/2 டீபூன்
* மிளகுத் தூள் - 1/2 டீபூன்
* கரம் மசாலா - 1/4 டீபூன்
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த மட்டனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து பிரட், குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள மட்டன் துண்டுகளைப் போட்டு, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வரமிளகாய் சேர்த்து கிளற வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் சீரகப் பொடி, வெந்தயம், மிளகுத் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வெண்டும.
* இந்நிலையில் வேக வைத்து இறக்கியுள்ள மட்டனை மசாலாவுடன் சேர்த்து கிளறிய பின் 1/4 கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீரானது ஓரளவு வற்றியதும், அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான மலபார் மட்டன் ரோஸ்ட் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications