Latest Updates
-
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
மலபார் தேங்காய் சாதம் ரெசிபி... இந்த மாதிரி ஒருமுறை தேங்காய் சாதம் செஞ்சு பாருங்க... வேற லெவலில் இருக்கும்...
Malabar Coconut Rice Recipe in Tamil: சாம்பார், ரசம், புளிக்குழம்பு போன்றவற்றை சாப்பிட்டு போரடிக்கும் சமயத்தில் அனைவரும் கலவை சாதத்தைதான் விரும்புவார்கள். உங்கள் வீட்டில் அடிக்கடி வெரைட்டி ரைஸ் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வெரைட்டி ரைஸ் என்றால் ரொம்ப பிடிக்குமா? அதுவும் வெரைட்டி சாதத்தில் தேங்காய் சாதம் என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்களா? எப்போதும் தேங்காய் சாதத்தை ஒரே ஸ்டைலில் தான் செய்வீர்களா?
அப்படியானால் ஒருமுறை மலபார் ஸ்டைல் தேங்காய் சாதத்தை செய்யுங்கள். இந்த தேங்காய் சாதம் வழக்கமான தேங்காய் சாதம் போல அல்லாமல் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த ஸ்டைல் தேங்காய் சாதம் செய்யும் போது வழக்கமாக தேங்காய் சாதம் சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக இந்த சாதம் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் படி இருக்கும்.

தேங்காய்ப்பால், சின்ன வெங்காயம் போன்றவை சேர்க்கப்படுவதால் இது சுவையானதாக இருப்பதுடன் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். வேலைக்கு செல்பவர்கள், பேச்சுலர்கள், குழந்தைகளுக்கு லன்ச் செய்து கொடுக்கும் அம்மாக்கள் இந்த மாதிரியான தேங்காய் சாதத்தை தெரிந்து வைத்துக் கொண்டால், அவசர நேரத்தில் கைக்கொடுக்கும்.
உங்களுக்கு மலபார் ஸ்டைல் தேங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மலபார் ஸ்டைல் தேங்காய் சாத ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் தேங்காய்ப்பால்
- 1½ கப் ஊறவைத்த அரிசி
- 15 வெங்காயம்
- 1 டேபிள்ஸ்பூன் நெய்
- 5 கிராம்பு
- 1 இன்ச் இலவங்கப்பட்டை
- 1 ஏலக்காய்
- ½ டீஸ்பூன் சோம்பு
- ஒரு கொத்து கறிவேப்பிலை
- 2 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- தேவையான அளவு உப்பு
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
- ½ டீஸ்பூன் கரம் மசாலா தூள்
செய்முறை:
- முதலில் சின்ன வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி சூடாக்கவும். பின்னர் கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் சோம்பு சேர்த்து வதக்கவும்.
- பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் நன்றாக வதக்கவும். அதன்பின் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, கலந்து 10-15 வினாடிகள் வதக்கவும்.
- அதன்பின் ஊறவைத்த அரிசியைச் சேர்த்து நன்கு கலக்கவும். பாதி தேங்காய்ப்பால், ½ கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லித் தூள் மற்றும் கரம் மசாலா தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்கு கலந்து, மூடி வைத்து அரிசி முழுமையாக வேகும் வரை சமைக்கவும்.
- அரிசி நன்றாக வெந்ததும் மீதமுள்ள தேங்காய்ப் பாலைச் சேர்த்து, நன்கு கலந்து, மூடி வைத்து 2-3 நிமிடங்கள் சமைக்கவும்.
- இறுதியாக ஒரு ஸ்பூன் நெய்யை சாதம் மீது ஊற்றி கிளறவும்.
- அவ்வளவுதான் சூடான மலபார் ஸ்டைல் தேங்காய் சாதம் ரெடி...!



Click it and Unblock the Notifications