Latest Updates
-
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும்
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
Malabar Chicken Curry Recipe in Tamil: ஞாயிறுக்கிழமை வந்தாலே அசைவம் சாப்பிட வேண்டுமென்பது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. அசைவ சமையல் என்று வரும் போது மற்ற அசைவ உணவுகளை விட சிக்கனை சமைப்பது எளிதானது. சிக்கனை சமைக்கும் வழிகளுக்கு முடிவேயில்லை. கடவுளின் தேசமான கேரளா அசைவ உணவுகளுக்கு புகழ்பெற்றது. வழக்கமான சிக்கனையே அவர்கள் சில கூடுதல் பொருட்கள் சேர்த்து அட்டகாசமான சுவையில் செய்வார்கள். கேரளா ஹோட்டல்களுக்கு சென்றால் அங்கு மலபார் சிக்கன் என்று ஒரு சூப்பரான கிரேவி கிடைக்கும். இது பிரியாணி, சப்பாத்தி மற்றும் புரோட்டா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு கேரளா ஸ்டைல் மலபார் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் மலபார் சிக்கன் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 கப் நறுக்கிய வெங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 4 பச்சை மிளகாய் (பாதியாகக் கீறியது)
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 2 ஸ்பூன் மல்லித்தூள்
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் மிளகுத் தூள்
-1 கப் நறுக்கிய தக்காளி
- 1 கிலோ சிக்கன்
- தேவையான அளவு உப்பு
- 1 கப் அரைத்த தேங்காய்
தாளிக்க:
- 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- ¼ கப் நறுக்கிய தேங்காய்
- ¼ கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
செய்முறை:
- அடி கனமான ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, மிதமான தீயில் சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும், வெங்காயத்தைச் சேர்த்து அது பழுப்பு நிறமாக மாறும் வரை வதக்கவும்.
- வெங்காயம் நிறம் மாறியதும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- மல்லித் தூள், மஞ்சள் தூள், காஷ்மீரி சிவப்பு மிளகாய்த் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து, 1 நிமிடம் வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து 3 நிமிடங்கள் சமைக்கவும். தக்காளி நன்கு குழையும் வரை வதக்கவும்.
- பின்னர் நன்றாக சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து நன்கு கிளறவும். 5 நிமிடங்கள் சிக்கனை நன்கு வதக்கவும்.
- சிக்கன் பாதி வெந்ததும் வாணலியில் அரைத்த தேங்காய் விழுது, உப்பு மற்றும் ½ கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து, வாணலியை ஒரு மூடியால் இறுக்கமாக மூடவும். சிக்கன் மென்மையாகும் வரை சமைக்கவும்.
- சிக்கன் வேகும் போது அடிபிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறிவிடவும். மூடியைத் திறந்து உப்பைச் சரிபார்க்கவும்.
- தாளிப்பதற்கு, ஒரு சிறிய வாணலியில் தேங்காய் எண்ணெயை மிதமான தீயில் சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும், கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- பின்பு தேங்காய் மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து, அடிக்கடி கிளறி அவை லேசாக பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும்.
- தயார் செய்த தாளிப்பை சிக்கன் கறியின் மீது ஊற்றி நன்றாகக் கிளறினால் சுவையான மலபார் சிக்கன் கறி ரெடி!



Click it and Unblock the Notifications