Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
தட்டைப்பயறு தேங்காய்ப்பால் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
முட்டையை வைச்சு இந்த மாதிரி மசாலா கீமா பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஒரு டிராபிக் சிக்னல் கூட இல்லாத உலகின் அதிசய நாடு எது தெரியுமா? நம்ம பக்கத்து நாடுதானாம் -
காரசாரமான ஆந்திரா பச்சை மிளகாய் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
சனி வக்ர பெயர்ச்சியைத் தொடங்குவதால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட இந்தியாவின் அதிசயக் கோவில் - எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
செட்டிநாடு இறால் தொக்கு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Crispy Cheetos Recipe In Tamil: இன்னும் பள்ளி விடுமுறை முடிந்திராத நிலையில், குழந்தைகள் வீட்டிலேயே இருப்பதால் ஏதாவது சாப்பிட கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அதுவும் தற்போது மேகமூட்டமாகவே இருப்பதால், நிச்சயம் மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் மொறுமொறுவென்று சாப்பிட ஏதாவது கேட்பார்கள்.
ஆனால் உங்கள் வீட்டில் ஸ்நாக்ஸ் எதுவும் இல்லையா? இந்நிலையில் உங்கள் வீட்டில் ரவை உள்ளதா? அதுவும் 1 கப் ரவை இருந்தால், அதைக் கொண்டு அருமையான சுவையில் மொறுமொறுவென்று சீட்டோஸ் செய்யலாம். இந்த சீட்டோஸை ஒரு டப்பாவில் செய்து வைத்துக் கொண்டால், உங்கள் பிள்ளைகள் கேட்கும் போதெல்லாம் எடுத்துக் கொடுக்கலாம்.

முக்கியமாக இந்த சீட்டோஸ் 10 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் சுலபமாக இருக்கும். அதோடு இது குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். எனவே இனிமேல் மாலை வேளையில் அல்லது மழை பெய்யும் நேரத்தில் பஜ்ஜி, போண்டா செய்வதற்கு பதிலாக, இந்த சீட்டோஸை செய்து கொடுங்கள். இதனால் விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு மொறுமொறுப்பான சீட்டோஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சீட்டோஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சிறிது
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* ரவை - 1 கப்
* பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாட் மசாலா/மாங்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் நீரை
ஊற்றி, அத்துடன் சிறிது உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நீரை
நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 1 கப் குட்டி ரவையை
சேர்த்து கட்டிகளின்றி கிளறி விட வேண்டும். அப்படி கிளறி விடும் போது,
ரவையானது அனைத்து நீரையும் உறிஞ்சிவிடும்.
* பின்பு தீயைக் குறைத்து, மூடி வைத்து, 3 நிமிடம் ரவையை வேக வைக்க
வேண்டும்.
* 3 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, ரவையை கிளறி விட்டு இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* ரவையானது நன்கு குளிர்ந்ததும், ரவையை பிசைந்து விட வேண்டும்.
* அதன் பின் கைகளில் எண்ணெய் தடவி, பிசைந்த ரவையை சிறு சிறு
உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை கொஞ்சம்
கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* பின் அந்த உருண்டைகளில் காரத்திற்கு மிளகாய் தூள், சாட்
மசாலா/மாங்காய் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து குலுக்கி
பரிமாறினால், மொறுமொறுப்பான சீட்டோஸ் தயார்.



Click it and Unblock the Notifications