Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
மைதா ரவா இனிப்பு போண்டா செய்வது எப்படி?
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? என்ன செய்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் குழந்தைகள் இனிப்பு போண்டாவை விரும்பி சாப்பிடுவார்களா? வீட்டில் ரவை மற்றும் மைதா உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு சுவையான மைதா ரவா இனிப்பு போண்டாவை செய்து கொடுங்கள்.
இந்த ரவா போண்டா செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது மாலை வேளையில் சட்டென்று செய்து கொடுக்கும் வகையில் ஏற்ற ஒரு ஈஸியான ஸ்நாக்ஸ். உங்களுக்கு மைதா ரவா இனிப்பு போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மைதா ரவா இனிப்பு போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* மைதா - 1/2 கப்
* சர்க்கரை - 3/4 கப்
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
* உப்பு . 1 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* ஒரு பௌலில் ரவை மற்றும் மைதா எடுத்து அதை ஒன்றாக கலந்து கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சர்க்கரை, ஏலக்காய் பொடி, உப்பு மற்றும் பேக்கிங் சோடா
ஆகியவற்றை போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் தேவையான அளவு நீரை ஊற்றி மென்மையாக கலந்து, மூடி
வைத்து 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* ஒரு மணிநேரம் கழித்து, மூடியை திறந்து கிளறும் போது, மாவானது
மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், ஒரு சிறிய கரண்டியில் மாவை எடுத்து, எண்ணெயில்
ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து மாவையும், எண்ணெயில் போட்டு போண்டாக்களாக
பொரித்து எடுத்தால், சுவையான மைதா ரவா இனிப்பு போண்டா தயார்.
Image Courtesy: spicyindiankitchen



Click it and Unblock the Notifications