Latest Updates
-
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க.. -
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா? -
அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறைவதை பாப்பீங்க.. -
அக்டோபர் 09 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 16-ல் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் கஷ்டங்களையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரட் சாதமும், கோவக்காய் வறுவலும் - மதியம் ஸ்கூலுக்கு இந்த காம்போ செய்யுங்க.. பாக்ஸ் காலியா தான் வரும்.. -
1/4 கிலோ வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா செஞ்சு பாருங்க - இதுவரை நீங்க சாப்பிடாத சுவையில் இருக்கும்
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
Mahalaya Amavasya 2026 Vazhaithandu Kootu Recipe In Tamil: மகாளய அமாவாசைக்கு முன்னோர்களுக்கு படையல் தயாரிக்கும் போது, குறிப்பிட்ட சில காய்கறிகளை சமைக்க வேண்டும் என்பார்கள். அதில் ஒன்று தான் வாழைத்தண்டு. இந்த வாழைத்தண்டை நீங்கள் எப்போதும் பொரியல் தான் செய்வீர்களா? அப்படியானால் இந்த மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை கொண்டு கூட்டு செய்யுங்கள். இந்த பக்குவத்தில் வாழைத்தண்டு கூட்டு செய்யும் போது, பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு வாழைத்தண்டு கூட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைத்தண்டு கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வாழைத்தண்டு - 400 கிராம் (பொடியாக நறுக்கியது)
* கடலைப் பருப்பு - 1/4 கப்
* துவரம் பருப்பு - 1/4 கப்
* பூண்டு - 3 பல்
* பச்சை மிளகாய் - 2
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* தண்ணீர் - 2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 2
* பூண்டு - 3 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பு மற்றும் துவரம் பருப்பை தனித்தனியாக
நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் வாழைத்தண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் நறுக்கிய வாழைத்தண்டை எடுத்துக் கொண்டு, அத்துடன்
ஊற வைத்த கடலைப் பருப்பு மற்றும் துவரம் பருப்பை கழுவி சேர்க்க
வேண்டும்.
* பிறகு அதில் பூண்டு, பச்சை மிளகாய், நறுக்கிய பெரிய வெங்காயம்,
தக்காளி, 2 கப் நீரை ஊற்றி கலந்து விட வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து,
குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 4 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் நன்கு கிளறி விட்டு,
பின் மீண்டும் அந்த குக்கரை அடுப்பில் வைத்து, கொதிக்க வைக்க
வேண்டும்.
* அதே சமயம் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வரமிளகாய், நறுக்கிய
பூண்டு பற்கள், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு வதக்கி,
கொதித்துக் கொண்டிருக்கும் வாழைத்தண்டுடன் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் துருவிய தேங்காயை சேர்த்து கலந்து, 3 நிமிடம்
மிதமான தீயில் வேக வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவி கலந்தால்,
சுவையான வாழைத்தண்டு கூட்டு தயார்.



Click it and Unblock the Notifications
