Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
வீட்டுல மேகி இருக்கா? அப்ப இந்த மாதிரி பேல் பூரி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க...
Maggi Bhel Puri Recipe In Tamil: வீட்டில் குழந்தைகள் இருந்தால், நிச்சயம் மாலை வேளையில் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்பார்கள். அப்படி கேட்கும் போது, நீங்கள் எப்போதும் ஒரே மாதிரியான ஸ்நாக்ஸை சாப்பிடக் கொடுத்தால், அது அவர்களுக்கு போரடித்துவிடும். உங்கள் குழந்தைகளுக்கு மாலை வேளையில் ஒரு ட்ரீட் தரும் வகையில் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
அப்படியானால் வீட்டில் மேகி இருந்தால், அவற்றைக் கொண்டு மேகி பேல் பூரியை செய்யுங்கள். இந்த மேகி பேல் பூரி குழந்தைகள் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த பேல் பூரி 5 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு மேகி பேல் பூரியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மேகி பேல் பூரி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேர்க்கடலை - 1/4 கப்
* மேகி - 1 பாக்கெட்
* வெண்ணெய் - 1 ஸ்பூன்
* பாதாம் - 5 (ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்)
* முந்திரி - 5 (ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மேகி மசாலா - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையைப்
போட்டு நன்கு வறுத்து இறக்கி, தோலை நீக்கிவிட்டு தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து
உருகியதும், அதில் ஒரு பாக்கெட் மேகியை நொறுக்கிப் போட்டு பொன்னிறமாக
வறுக்க வேண்டும்.
* அதன் பின் அத்துடன் வறுத்த வேர்க்கடலை, சிறிது பாதாம் மற்றும்
முந்திரியையும் போது சிறிது நேரம் வறுத்து இறக்கி ஒரு கிண்ணத்தில்
போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது மேகி
மசாலாவை சேர்க்க வேண்டும்.
* அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்க்க
வேண்டும்.
* இறுதியாக எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவி நன்கு
கரண்டியால் கிளறி பரிமாறினால், சுவையான மேகி பேல் பூரி தயார்.
Image Courtesy: PassionateHomemaker



Click it and Unblock the Notifications