Latest Updates
-
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்! -
பாலக் புலாவ் ரெசிபி - இந்த சத்தான புலாவை ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
பழைய விமானங்கள் ஓய்வு பெற்ற அவற்றின் நிலை என்னவாகும் தெரியுமா? இப்படிலாம் கூட பண்ணுவாங்களா? -
ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: நாளை முதல் அடுத்த 90 நாட்கள் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
மதுரை ஸ்பெஷல் சின்ன வெங்காய தக்காளி சட்னி ரெசிபி... இந்த சட்னி அரைச்சா எவ்வளவு இட்லி சுட்டாலும் பத்தாது...!
Madurai Tomato Chutney Recipe in Tamil: தமிழ்நாட்டில் உணவுகளின் நகரம் என்றால் அது மதுரைதான். மதுரை உணவுகளுக்கு எப்போதும் தனிரசிகர்கள் உண்டு. அசைவ உணவுகள் மட்டுமின்றி மதுரையில் இட்லி, தோசைக்கு கிடைக்கும் சைடிஷ்கள் கூட மிகவும் தனித்துவமானவையாக இருக்கும். அந்த வகையில் இட்லி, தோசைக்கு மதுரையில் பரிமாறப்படும் தக்காளி சட்னி மிகவும் பிரபலமானது.
தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான உணவு காலை மற்றும் இரவு உணவென்றால் அது இட்லி, தோசைதான். தினமும் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி அரைக்காமல் இதுபோல வித்தியாசமாக அரைத்துக் கொடுத்தால் வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவில் மதுரை ஸ்பெஷல் தக்காளி கார சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- நன்கு பழுத்த தக்காளி - 2
- சின்ன வெங்காயம் - 10 முதல் 15
- துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கருப்பு உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- வர மிளகாய் - 5
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து 1 டீஸ்பூன் கருப்பு
உளுந்தம் பருப்பை சேர்த்து நன்றாக வறுத்து தனியாக எடுத்து
வைத்துகொள்ளவும்.
- ஒருவேளை கருப்பு உளுந்து இலையென்றால் வெள்ளை உளுந்து
பயன்படுத்தவும்.
- அதே எண்ணெயில் ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்து நன்றாக வறுத்து
ஓரமாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அதே கடாயில் 5 வர மிளகாயை சேர்த்து நன்கு வறுத்து எடுத்து வைத்துக்
கொள்ளவும்.
- அதே பாணியில் கடாயில் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து
தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்
- பின்னர் சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி கடாயில் சேர்த்து
பொன்னிறமாகும் வரை வதக்கி தனியாக வைக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை
வதக்கவும்.
- இப்போது தனியாக எடுத்து வைத்த அனைத்தும் நன்கு ஆறியவுடன் அதில்
துருவிய தேங்காயை சேர்த்து கொரகொரவென அரைக்கவும்.
- இந்த சட்னியை தாளிக்க வேண்டிய அவசியமில்லை. இப்போது சூப்பரான மதுரை
சின்ன வெங்காய தக்காளி சட்னி ரெடி.
- இதனை சூடான இட்லி, தோசையுடன் பரிமாறினால் வீட்ல எல்லோரும் 2 இட்லி
அதிகமாக சாப்பிடுவார்கள்.



Click it and Unblock the Notifications