Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
சன்டே ஸ்பெஷல்: மதுரை ஸ்டைல் சிக்கன் குழம்பு
சன்டே வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா ருசிச்சு சாப்பிடலாம். இந்த சன்டே என்ன சமைக்குறது-ன்னு தெரியலையா? சிக்கன் வாங்கிட்டு வந்துருக்கீங்களா? அப்படின்னா அதை வெச்சு மதுரை ஸ்டைல் சிக்கன் குழம்பு செஞ்சு சாப்பிடுங்களேன்.
இந்த மதுரை ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்வது மிகவும் ஈஸி. மேலும் இது பேச்சுலர்களும் செய்யும் வகையில் எளிமையான செய்முறையைக் கொண்டிருக்கும். இந்த சிக்கன் குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்தி, பூரிக்கும் அட்டகாசமா இருக்கும். உங்களுக்கு மதுரை ஸ்டைல் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே மதுரை ஸ்டைல் சிக்கன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/4 கிலோ
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 8 பல்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சுள் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
கரம் மசாலாவிற்கு...
* கிராம்பு - 5
* பட்டை - 2 இன்ச்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* ஏலக்காய் - 2
* மிளகு - 1 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கரம் மசாலாவிற்கு
கொடுத்துள்ள பொருட்களுள் மல்லித் தூளைத் தவிர, மற்ற அனைத்தையும்
சேர்த்து, லேசாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட
வேண்டும்.
* பின் அத்துடன் மல்லித் தூளை சேர்த்து நன்கு நைஸாக பொடி போன்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு இஞ்சி மற்றும் பூண்டு பற்களையும் ஒன்றாக சிறிது நீர்
சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் சிக்கனை மஞ்சள் தூள் சிறிது சேர்த்து நன்கு கழுவி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயத்தைப் போட்டு நன்கு பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி மென்மையாகும்
வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் கழுவிய சிக்கனை சேர்த்து, நிறம் மாறும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூள் தூவி நன்கு கிளறி,
2 கப் நீரை ஊற்றி, 5 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள கரம் மசாலாவை சேர்த்து, 1/2 கப் நீரை
ஊற்றி, மூடி வைத்து 20 நிமிடம் மிதமான தீயில் வைத்து, சிக்கனை வேக
வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் ஆனதும், அடுப்பை அணைத்துவிட்டு, மூடியைத் திறந்து, மேலே
கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மதுரை ஸ்டைல் சிக்கன் குழம்பு
தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications