Latest Updates
-
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம் -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த மணமணக்கும் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
எலுமிச்சை நீர் Vs தேன் கலந்த நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க? -
இந்த 4 விஷயங்களை பின்பற்றாதவரின் குடும்பம் விரைவில் வறுமையில் சிக்குமாம் - சாணக்கிய ரகசியம் -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கடன் தீரும் காசு சேரும்.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
வெந்தயக்கீரை தேங்காய் பால் கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
மணமணக்கும்... மதுரை ஸ்பெஷல் ப்ளைன் சால்னா
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு ஒரு சிம்பிளான அதே சமயம் சுவையான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் மதுரை ஸ்பெஷல் ப்ரைன் சால்னா செய்யுங்கள்.
இந்த ப்ளைன் சால்னா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, பரோட்டா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சால்னா செய்வதற்கு காய்கறிகள் எதுவும் தேவையில்லை. வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் சீக்கிரம் செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியான செய்முறையைக் கொண்டது.

குறிப்பாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். உங்களுக்கு மதுரை ஸ்பெஷல் ப்ளைன் சால்னா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே மதுரை ஸ்பெஷல் ப்ளைன் சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 2
* கல்பாசி - சிறிது
* பிரியாணி இலை - 1
* பெரிய வெங்காயம் - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* புதினா - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* தக்காளி - 3
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா . 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* முந்திரி - 5
செய்முறை:
* முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு
பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய் மற்றும் முந்திரி சேர்த்து சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக
வதங்கியதும், புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள்,
மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு 1 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான
அளவு நீரை ஊற்றி குக்கரை மூடி, குறைவான தீயில் வைத்து 2 விசில் விட்டு
இறக்கினால், சுவையான மதுரை ஸ்பெஷல் ப்ளைன் சால்னா தயார்.
Image Courtesy: chitrasfoodbook



Click it and Unblock the Notifications