Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
மதுரை ரோட்டுக்கடை மட்டன் சால்னா- எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
Madurai Rottukadai Mutton Salna Recipe In Tamil: இந்த வார விடுமுறை நாளில் உங்கள் வீட்டில் வித்தியாசமான சுவையுடைய மட்டன் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் மதுரை ரோட்டுக்கடை மட்டன் சால்னாவை செய்யுங்கள்.
இந்த சால்னா பூரி, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். ஒருமுறை இந்த குழம்பை வைத்தால், பின் அடிக்கடி இந்த குழம்பை செய்வீர்கள். அந்த அளவில் சுவை பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு மதுரை ரோட்டுக்கடை மட்டன் சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை ரோட்டுக்கடை மட்டன் சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* பட்டை - 3 துண்டு
* கிராம்பு - 8
* ஜாவித்திரி - பாதி
* அன்னாசிப்பூ - 1
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 3/4 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 3/4 டீஸ்பூன்
* கல்பாசி - 1 பெரிய துண்டு
* ஜாதிக்காய் - சிறிது
சால்னாவிற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* ஏலக்காய் - 2
* கல்பாசி - சிறிது
* சின்ன வெங்காயம் - 25 (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மட்டன் கொழுப்பு - 75 கிராம்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* நெஞ்செலும்பு கறி - 150 கிராம்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3 டீஸ்பூன்
* அரைத்த மசாலா பொடி
* குழம்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 லிட்டர்
* கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1 1/2 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பட்டை, கிராம்பு, ஜாவித்திரி,
அன்னாசிப்பூ, சீரகம், சோம்பு, மிளகு, கல்பாசி, சிறிது ஜாதிக்காய்
சேர்த்து பொடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை,
வேர்க்கடலை, கசகசா சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், பிரியாணி இலை, ஏலக்காய், கல்பாசி, பொடியாக நறுக்கிய சின்ன
வெங்காயம், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புதினா, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மட்டன் கொழுப்பு சேர்த்து, அதோடு காஷ்மீரி மிளகாய்
தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மட்டன் நெஞ்செலும்பு கறியை சேர்த்து, நிறம் மாற
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், அரைத்த மசாலா பொடி,
குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 1 லிட்டர் நீரை ஊற்றி கிளறி, நன்கு கொதிக்க
ஆரம்பித்ததும், குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் அந்த குக்கரை
வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, 5
நிமிடம் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதித்ததும், அதில் கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி
கிளறி, நன்கு 3-4 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* கடைசியாக வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், காஷ்மீரி மிளகாய் தூள்
மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கிளறி,
கொத்தமல்லி மற்றும் புதினாவை சிறிது தூவி கிளறி இறக்கினால், சுவையான
மதுரை ரோட்டுக்கடை மட்டன் சால்னா தயார்.



Click it and Unblock the Notifications











