Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
மதுரை ரோட்டுக்கடை சிக்கன் சால்னா - எப்படி செய்யணும் தெரியுமா? இது இட்லி, பூரி, சப்பாத்திக்கு சும்மா அள்ளும்...
Madurai Rottukadai Chicken Salna Recipe In Tamil: காலையில் வீட்டில் இட்லி, பூரி அல்லது சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு ஒரு பக்காவான சிக்கன் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் மதுரை ரோட்டுக்கடை சிக்கன் சால்னாவை செய்யுங்கள்.
இந்த சால்னா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, வாசனையே ஆளை சுண்டி இழுக்கும். இந்த வார விடுமுறையை சிறப்பாக தொடங்க நினைத்தால், இந்த சிக்கன் சால்னாவை செய்து ரசித்து ருசித்து சாப்பிடுங்கள். இந்த சால்னா பேச்சுலர்களும் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு மதுரை ரோட்டுக்கடை சிக்கன் சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை ரோட்டுக்கடை சிக்கன் சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1/2 கிலோ
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* கல்பாசி - 1/4
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1 1/2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* பெரிய தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1 கப்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 3
* சோம்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* கல்பாசி - சிறிது
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு,
அத்துடன் தயிர், மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து பிரட்டி
1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பட்டை, கிராம்பு, சோம்பு,
கல்பாசி, வேர்க்கடலை, பச்சை மிளகாய் மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பிரியாணி இலை, கல்பாசி, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது நீரை
ஊற்றி, நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து, தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சிக்கன் மசாலா,
கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு குறைவான தீயில் வைத்து பச்சை
வாசனை போக கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி, மூடி
வைத்து சிக்கன் நீர் விட்டு வரும் வரை வேக வைக்க வேண்டும்.
* சிக்கனில் இருந்து நீர் விட்டு நிறம் மாறி வந்ததும், அதில் சிறிது
நீரை ஊற்றி, சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து
கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால்
உப்பு சேர்த்து கிளறி, சிறிது கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து
கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான மதுரை
சிக்கன் சால்னா தயார்.



Click it and Unblock the Notifications