Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
காரசாரமான.. மதுரை பெப்பர் சிக்கன் கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணி பாருங்க..
Madurai Pepper Chicken Gravy In Tamil: இந்த வார விடுமுறையில் உங்கள் வீட்டில் சிக்கன் வாங்க போகிறீர்களா? அந்த சிக்கனை வாய்க்கு ருசியாக, அதே சமயம் இதுவரை நீங்கள் வீட்டில் செய்திராத ஒரு ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் மதுரை பெப்பர் சிக்கன் கிரேவியை செய்யுங்கள்.
இந்த பெப்பர் சிக்கன் கிரேவி சப்பாத்தி, பூரி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். சளி பிடித்திருக்கும் போது, இந்த மதுரை பெப்பர் சிக்கன் கிரேவியை செய்து சாப்பிட்டால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

உங்களுக்கு மதுரை பெப்பர் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை பெப்பர் சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
* சின்ன வெங்காய பேஸ்ட் - 200 கிராம்
* தக்காளி பேஸ்ட் - 200 கிராம்
* இஞ்சி பேஸ்ட் - 75 கிராம்
* பூண்டு பேஸ்ட் - 7 கிராம்
* பச்சை மிளகாய் - 2
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 25 கிராம்
* மிளகுத் தூள் - 50 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* கடலை எண்ணெய் - 200 மிலி
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த சின்ன வெங்காய பேஸ்ட், கீறிய பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து நன்கு வெங்காயத்தின் பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு கிளறி விட வேண்டும்.
* கிரேவி நன்கு கொதித்து, சிக்கன் வெந்ததும், அதில் சீரகத் தூள்
மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் நன்கு வேக
வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லி, புதினாவை சேர்த்து கிளறி இறக்கி, நெய்
ஊற்றி கிளறினால், சுவையான மதுரை பெப்பர் சிக்கன் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications