Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
காரசாரமான... மதுரை பச்சை மிளகாய் சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்துட்டு செஞ்சு பாருங்க..
Madurai Pachai Milagai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிகீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் ஒரே மாதிரியான சட்னியை சாப்பிட்டு போரடித்துவிட்டது என்று கூறுகிறார்களா? சற்று வித்தியாசமான சுவையுடைய, அதே சமயம் புதுமையான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் காரமான சட்னியை மதுரை பச்சை மிளகாய் சட்னியை செய்ய 3 பொருட்களே போதுமானது, இப்படி சட்னியை செய்து இட்லியுடன் சேர்த்து சாப்பிட்டால் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு மதுரை பச்சை மிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை பச்சை மிளகாய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/4 கப்
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* பச்சை மிளகாய் - 8
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பை சேர்த்து நன்கு நிறம் மாற
வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புளி மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு
வதக்கி இறக்கை குளிர வைக்க வேண்டும்
* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் நீரை ஊற்றி, 8
பச்சை மிளகாயை சேர்த்து, பச்சை மிளகாயின் நிறம் மாற வேக வைக்க
வேண்டும்.
* பச்சை மிளகாயின் நிறம் மாறியதும், அடுப்பை அணைத்துவிட்டு, பச்சை
மிளகாயை ஒரு தட்டில் எடுத்து வைத்து குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த கடலைப் பருப்பு, புளியை சேர்த்து
முதலில் ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் பச்சை மிளகாயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்தால், சுவையான
மற்றும் காரசாரமான மதுரை பச்சை மிளகாய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications