Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
மணமணக்கும்.. மதுரை ஃபேமஸ் முட்டை கொத்து மாஸ் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
Madurai Famous Muttai Kothu Mass Recipe In Tamil: உங்கள் வீட்டில் குழந்தைகள் முட்டைகளை வேக வைத்து கொடுத்தால் சாப்பிடமாட்டார்களா? அவர்களை வேக வைத்த முட்டைகளை சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் அவர்களுக்கு மதுரை ஃபேமஸ் முட்டை மாஸ் செய்து கொடுங்கள்.
இந்த முட்டை மாஸ் சப்பாத்தி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக வீட்டிற்கு விருந்தினர்கள் திடீரென்று வந்தால், அவர்களுக்கு வீட்டில் முட்டை இருந்தால், அவற்றைக் கொண்டு மதுரை முட்டை கொத்து மாஸ் செய்து கொடுத்தால், நல்ல பாராட்டைப் பெறலாம்.

உங்களுக்கு மதுரை ஃபேமஸ் முட்டை மாஸ் ரெசிபியின் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை ஃபேமஸ் முட்டை மாஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேக வைத்த முட்டை - 7
* தேங்காய் எண்ணெய் - 100 மிலி
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
* தட்டி வைத்துள்ள பூண்டு - 15 கிராம்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* புதினா - 1/2 கைப்பிடி
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பெரிய
வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாய் மற்றும் இடித்து வைத்துள்ள பூண்டு
பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, சிறிது நீரை
ஊற்றி, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, சிறிது கறிவேப்பிலை
தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, சீரகத் தூள் மற்றும்
மிளகுத் தூள் சேர்த்து, சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கி, ஒரு
கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் வேக வைத்த முட்டைகளை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு அகலமான தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள்
ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, பின் நீளவாக்கில் நறுக்கிய பெரிய
வெங்காயம் மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயத்தை கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் செய்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சிறிது உப்பு தூவி
நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் துண்டுகளாக்கப்பட்ட முட்டை, கொத்தமல்லி, புதினாவை
சேர்த்து நன்கு பிரட்டி கொத்திவிட்டால், சுவையான மதுரை முட்டை மாஸ்
தயார்.



Click it and Unblock the Notifications