Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் ரெசிபியான ஜவ்வரிசி வடையை எப்படி செய்யணும் தெரியுமா?
Madhampatty Rangaraj Special Javvarisi Vadai Recipe: மாலை வேலையில் பள்ளி முடிந்து வீட்டில் பசியுடன் வரும் குழந்தைகளுக்கு, அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறும், அவர்களின் பசியைப் போக்கக்கூடியவாறும் ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
உங்கள் குழந்தைகள் வடையை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் சிக்னேச்சர் ரெசிபியான ஜவ்வரிசி வடையை செய்து கொடுங்கள். இந்த ஜவ்வரிசி வடை வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டு செய்யக்கூடியவாறு இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு ஜவ்வரிசி வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஜவ்வரிசி - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பிரட் - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஜவ்வரிசியை சுடுநீரில் சுமார் 2 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை ஒரு பாத்திரத்தில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை
சேர்க்க வேண்டும்.
* அதன் பின் நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு நீரில் பிரட் துண்டுகளை நனைத்து எடுத்து, அதில் உள்ள
அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட்டு, ஜவ்வரிசியுடன் சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின் கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம்
கொஞ்சமாக எடுத்து, வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக
பொரித்து எடுத்தால், சுவையான ஜவ்வரிசி வடை தயார்.
Image Courtesy: Traditionally Modern Food



Click it and Unblock the Notifications
