Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மாதம்பட்டி தக்காளி ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும்
Madhampatti Thakkali Rasam Recipe in Tamil: எவ்வளவு பெரிய விருந்தாக இருந்தாலும், அது சைவ விருந்தாக இருந்தாலும் சரி, அசைவ விருந்தாக இருந்தாலும் சரி ரசம் இல்லாமல் முழுமைப் பெறாது. என்ன தான் ரசம் ஒரு சிம்பிளான ரெசிபியாக இருந்தாலும், அந்த ரசத்திற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஏனெனில் ரசத்தில் மிளகு ரசம், பூண்டு ரசம், தக்காளி ரசம், கொள்ளு ரசம், முருங்கைக்கீரை ரசம் என்று பல உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் இருப்பதுடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

நீங்களும் அப்படி ஒரு ரச பிரியரா? இதுவரை நீங்கள் எத்தனையோ ரசத்தை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மாதம்பட்டி தக்காளி ரசத்தை சுவைத்துள்ளீர்களா? தக்காளி ரசம் மிகவும் பிரபலமானதுதான் ஆனால் இந்த மாதம்பட்டி தக்காளி ரசம் கொஞ்சம் வித்தியாசமானது. பிரபல செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் இந்த ரசத்தின் ரெசிபியை தனது YouTube சேனலில் பகிர்ந்துள்ளார். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான ரசத்தை செய்து கொடுத்து அசத்த நினைத்தால், இந்த மாதம்பட்டி தக்காளி ரசத்தை இன்று செய்து கொடுங்கள். திருப்தியான உணவு சாப்பிட்ட பிறகு இந்த ரசத்துடன் விருந்தை முடித்தால் பரம திருப்தியாக இருக்கும்.
உங்களுக்கு மாதம்பட்டி ஸ்டைல் தக்காளி ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த மாதம்பட்டி தக்காளி ரச ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளங்கள்.
தேவையான பொருட்கள்:
- தக்காளி - 3
- புளி - நெல்லிக்காய் அளவு
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- பூண்டு - 5 பல்
- தண்ணீர் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு -அரை ஸ்பூன்
- வெந்தயம் - கால் ஸ்பூன்
- வர மிளகாய் - 3
- பெருங்காயம் - 2 சிட்டிகை
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
செய்முறை:
- முதலில் புளியை ஊற வைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீரில் வேக வைக்கவும்.
- தக்காளி தோல் பிரியும் அளவிற்கு வெந்ததும் அடுப்பை அணைத்து அதை ஆற விடவும்.
- தக்காளி ஆறியதும் அதை கைகளால் நன்றாக பிசைந்து கொள்ளவும். அதன் தோலை நீக்கி விட்டு அதில் புளிச்சாறை சேர்க்கவும்.
- பின்னர் இந்த கரைசலில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- இது கொதிக்கும் நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், பூண்டு மற்றும் 2 வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் மற்றும் வர மிளகாயை சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் அதில் அரைத்த மசாலா மற்றும் பெருங்காயத்தை சேர்த்து நன்கு கிளறவும்.
- இந்த தாளிப்பை ரசத்தின் மீது கொட்டி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- ரசம் கொதித்து நுரை வரும் போது கொத்தமல்லி சேர்த்து கிளறி அடுப்பை அணைத்தால் சுவையான மாதம்பட்டி தக்காளி ரசம் ரெடி!



Click it and Unblock the Notifications