Latest Updates
-
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா?
Pepper Rice With Potato Fry Recipe In Tamil: தினமும் ஸ்கூலுக்கு என்ன சமைத்து கொடுப்பது என்று முடிவெடுப்பதே ஒரு பெரிய வேலையாக உள்ளதா? நாளை என்ன செய்து கொடுப்பது என்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? உங்கள் பிள்ளைகள் வித்தியாசமான வெரைட்டி ரைஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? அப்படியானால் ஒருமுறை மிளகு சாதம் செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக உருளைக்கிழங்கு ப்ரையை செய்து கொடுங்கள். இப்படி ஒருமுறை செய்து கொடுங்கள், அப்புறம் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு இந்த மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகு சாதம் மற்றும் உருளைக்கிழங்கு ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மிளகு சாதத்திற்கு...
வறுத்து பொடி செய்வதற்கு..
* மிளகு - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு..
* நெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - சிறிது
* பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பாசுமதி அரிசி சாதம் - 2 கப்
* அரைத்த மிளகு சீரக பொடி
* உப்பு - சுவைக்கேற்ப
உருளைக்கிழங்கு ப்ரைக்கு..
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 (தட்டியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 3
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு சேர்த்து
நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் சீரகத்தை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து,
மிக்சர் ஜாரில் சேர்த்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி ஆகியவற்றை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, வரமிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பாசுமதி அரிசி சாதத்தை சேர்த்து, அத்துடன் அரைத்த
மிளகு சீரக பொடி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி
இறக்கினால், சுவையான மிளகு சாதம் தயார்.
* பின்பு உருளைக்கிழங்கு ப்ரை செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில்
சீரகம், தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய உருளைக்கிழங்கு, கறிவேப்பிலை, சுவைக்கேற்ப
உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 3 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* பிறகு அதில் சாம்பார் தூள் சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில்
வைத்து 10-15 நிமிடம் வேக வைத்து இறக்கினால், ருசியான உருளைக்கிழங்கு
ப்ரை தயார்.



Click it and Unblock the Notifications
