Latest Updates
-
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
லன்ச் பாக்ஸ்-க்கு எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இந்த ரைஸ் செஞ்சு கொடுங்க..
Lunchbox Recipe Meal maker Rice In Tamil: ஒவ்வொரு நாளும் காலையில் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு லன்ஸ் பாக்ஸிற்கு என்ன சமைத்து கொடுப்பது என்று முடிவெடுப்பது கடினமாக உள்ளதா? நீங்கள் எப்போதும் ஒரே மாதிரியான உணவைத் தான் திரும்ப திரும்ப செய்வீர்களா? இதனால் சில நாட்கள் உங்கள் பிள்ளைகள் சரியாக சாப்பிடாமல் வருகிறார்களா?
அப்படியானால் அவர்களுக்கு ஒருமுறை மீல் மேக்கர் ரைஸ் செய்து கொடுங்கள். இந்த சாதம் புரோட்டீன் அதிகம் நிறைந்தது மற்றும் ருசியானதும் கூட. இந்த சாதத்தை செய்து கொடுத்தால், உங்கள் பிள்ளைகள் மிச்சம் ஏதும் வைக்காமல் காலி செய்வார்கள்.

உங்களுக்கு மீல் மேக்கர் ரைஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் ரைஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மீல் மேக்கர் - 1 கைப்பிடி
* பாஸ்மதி அரிசி சாதம்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொட்டுக்கடலை,
சீரகம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து
இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து
கொள்ள வேண்டும்.
* பின்னர் சுடுநீரில் மீல் மேக்கரை சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து,
பின் நீரைப் பிழிந்துவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு லேசாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து நன்கு 2
நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் பாஸ்மதி அரிசி சாதத்தை சேர்த்து, நன்கு ஒன்று சேரும்
வரை கிளறி விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான மீல்
மேக்கர் ரைஸ் தயார்.



Click it and Unblock the Notifications
