Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் தேங்காய் பீட்ரூட் சாதத்தை செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க..
Coconut Beetroot Rice Recipe In Tamil: மதியம் லன்ச்பாக்ஸிற்கு என்ன சமைத்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான உணவை சமைத்து கொடுத்து, உங்கள் பிள்ளைகள் சரியாக சாப்பிடமாட்டேங்குறாங்களா? உங்கள் பிள்ளைகளை காய்கறிகள் சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் அதற்கு சிறந்த வழி, காய்கறிகளைக் கொண்டு வெரைட்டி ரைஸ் செய்து கொடுப்பது தான்.
அதுவும் உங்கள் பிள்ளைகள் பீட்ரூட்டை பொரியல் செய்து கொடுத்தால் சாப்பிடமாட்டார்களானால், அந்த பீட்ரூட்டை தேங்காயுடன் சேர்த்து வெரைட்டி ரைஸ் செய்து கொடுங்கள். இப்படி வெரைட்டி ரைஸ் செய்து கொடுக்கும் போது, உங்கள் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவதோடு, அடிக்கடி செய்து கொடுக்கவும் சொல்வார்கள். ஏனெனில் அந்த அளவில் இந்த தேங்காய் பீட்ரூட் சாதம் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் பீட்ரூட் சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் பீட்ரூட் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வடித்த சாதம் - 1 கப்
* பீட்ரூட் - 1/2 கப்
* தேங்காய் - 1/2 கப்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பீட்ரூட் மற்றும் தேங்காயை சம அளவில்
எடுத்து கொரகொரவென்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை,
முந்திரி ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை மற்றும் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாயை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பீட்ரூட் தேங்காயை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு வடித்து ஆற வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* இறுதியாக எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி
பிரட்டி இறக்கினால், சுவையான தேங்காய் பீட்ரூட் சாதம் தயார்.



Click it and Unblock the Notifications
