Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
காலையில் லன்ச் பாக்ஸ்-க்கு குடைமிளகாயை வெச்சு இப்படியொரு ரைஸ் செஞ்சு குடுங்க.. பாக்ஸ் காலியா வரும்...
Capsicum Rice Recipe In Tamil: உங்கள் வீட்டில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் இருந்தால், ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு என்ன சமைத்து கொடுப்பது என்று யோசித்து முடிவெடுப்பதே ஒரு பெரிய வேலையாக இருக்கும். அதுவும் உங்கள் குழந்தைகள் சாப்பிடுவதில் அடம்பிடிப்பவரானால், அவர்களுக்கு பிடித்த மாதிரி லன்ச் பாக்ஸிற்கு செய்து கொடுப்பது என்று சவாலான ஒன்றாகவே இருக்கும். ஏனெனில் பிடிக்காவிட்டால் குழந்தைகள் சாப்பிடாமல் அப்படியே எடுத்து வந்துவிடுவார்கள்.
எனவே உங்கள் குழந்தைகள் பிடித்தவாறு ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபி செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் குடைமிளகாய் உள்ளதா? அப்படியானால் அந்த குடைமிளகாயைக் கொண்டு அற்புதமான ஒரு வெரைட்டி ரைஸ் செய்யுங்கள். இந்த குடைமிளகாய் சாதம் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு குடைமிளகாய் சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி சாதம் - 1 கப் (வடித்து குளிர வைத்தது)
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* குடைமிளகாய் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
அரைப்பதற்கு..
* வரமிளகாய் - 3
* பூண்டு - 10 பல்
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் 10 நிமிடம் ஊற வைத்து,
கொதிக்கும் நீரில் போட்டு உப்பு சேர்த்து வேக வைத்து குளிர வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி வதங்குவதற்குள், மிக்சர் ஜாரில் வரமிளகாய் மற்றும் பூண்டு
சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் அரைத்து வைத்துள்ள விழுதை
சேர்த்து நன்கு பச்சை வாசனை போக மிதமான தீயில் வைத்து வதக்க
வேண்டும்.
* பின் அதில் குடைமிளகாயை சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து வேக வைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து லேசாக கிளறி
இறக்கினால், சுவையான குடைமிளகாய் சாதம் தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications