Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
ஒருடைம் லன்ச் பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செஞ்சு குடுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Tomato Rice Recipe In Tamil: காலையில் ஸ்கூலுக்கு என்ன சமைப்பது என்று யோசிக்க தொடங்கிவிட்டீர்களா? பெரும்பாலும் உங்கள் குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸிற்கு வெரைட்டி ரைஸ் செய்து கொடுக்க நினைப்பீர்களா? அதுவும் அடிக்கடி தக்காளி சாதம் செய்து கொடுப்பீர்களா? இருப்பினும் உங்கள் பிள்ளைகள் அதை விரும்பி சாப்பிடமாட்டார்களா?
அப்படியானால் அடுத்தமுறை தக்காளி சாதம் செய்வதாக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்யுங்கள். இதனால் உங்கள் பிள்ளைகள் இதை விரும்பி சாப்பிடுவதோடு, அடிக்கடி செய்து கொடுக்கவும் கேட்பார்கள்.

உங்களுக்கு தக்காளி சாதத்தை 10 நிமிடத்தில் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சாதம் - 2 கப்
* தக்காளி - 3
* எண்ணெய் - 2 டேபிள் 1பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 1
* பெரிய வெங்காயம் - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் சாதத்தை செய்து, அதை குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம்,
கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சிறிது சேர்த்து, பச்சை
மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள்
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக
வைக்க வேண்டும்.
* இறுதியாக வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு ஒருசேர கிளறி,
கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான தக்காளி சாதம் தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications