Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இஞ்சி எலுமிச்சை ரசம் ரெசிபி... இந்த ரசம் வைச்சா வேற எந்த குழம்புமே தேவைப்படாது... அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும்!
Lemon Ginger Rasam Recipe In Tamil: இந்திய உணவுகளில் குறிப்பாக தென்னிந்திய உணவுகளில் ரசம் மிகவும் முக்கியமானதாகும். எவ்வளவு பெரிய விருந்து சாப்பிட்டாலும் அதை ரசத்துடன் முடித்தால்தான் திருப்தியாக இருக்கும். ரசம் சுவையானதாக இருப்பதுடன் கடினமான உணவுகளை எளிதில் செரிமானம் அடையவும் வைக்கிறது. பொதுவாக அனைத்து வீடுகளிலும் செய்யப்படும் ரசம் என்றால் அது தக்காளி ரசம்தான்.
ஆனால் ரசத்தில் பல்வேறு வகைகள் உள்ளது. சில ஆரோக்கியமான பொருட்களை சேர்த்து தயாரிப்பதன் மூலம் ரசத்தை கூடுதல் சுவையாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றலாம். அப்படிப்பட்ட தனித்துவமான மற்றும் ஆரோக்கியமான ரசம்தான் இஞ்சி எலுமிச்சை ரசம். இந்த ரசம் செரிமானத்தை ஊக்குவிப்பது மட்டுமின்றி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கிறது. இந்த பதிவில் இஞ்சி எலுமிச்சை ரசத்தை எப்படி வைக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- தக்காளி - 1
- நறுக்கிய இஞ்சி - 1 துண்டு
- பச்சை மிளகாய் - 4
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கொத்தமல்லி - சிறிதளவு
- மஞ்சள் - அரை ஸ்பூன்
- தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
- வேகவைத்த துவரம் பருப்பு - அரை கப்
- எலுமிச்சை - அரை பழம்
- உப்பு - தேவைக்கு ஏற்ப
தாளிக்க:
- நெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- சீரகம் - அரை ஸ்பூன்
- வர மிளகாய் - 1
- மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
- ஒரு பெரிய பாத்திரத்தில் தக்காளி, இஞ்சி, மிளகாய், கொத்தமல்லி
மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- பின்னர் மஞ்சள் மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
- சில நிமிடங்கள் அல்லது தக்காளி மென்மையாக மாறும் வரை கொதிக்க
வைக்கவும்.
- பின்னர் ஒரு கரண்டியை வைத்து தக்காளியை நன்றாக பிசைந்து
கொள்ளவும்.
- இப்போது வேகவைக்கப்பட் துவரம்பருப்பை அதில் சேர்க்கவும்.
துவரம்பருப்பு நன்கு வெந்திருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
- தேவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும்.
- நன்றாக கலந்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து ரசம் பதத்திற்கு கொண்டு
வரவும்.
- இதை 3 நிமிடங்கள் மட்டும் கொதிக்க வைக்கவும். ஏனெனில் வேகவைத்த
பருப்பை நீண்ட நேரம் கொதிக்க வைக்கக்கூடாது. ரசம் கொதிக்கும் போது
அதில் எலுமிச்சை சாறை சேர்க்கவும்.
- ரசத்தை தாளிக்க ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி அதில் கடுகு,
சீரகம், வர மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் மற்றும் மிளகை
சேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும் அதை ரசத்தின் மீது ஊற்றி நன்கு கிளறவும்.
- இந்த ரசத்தை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் வயிறு
ஆரோக்கியத்திற்கு நல்லது.



Click it and Unblock the Notifications