Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மதியம் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டக்குன்னு காலியாகும்..
Restaurant Style Egg Fried Rice Recipe In Tamil: மதியம் சமைத்த சாதம் நிறைய மீந்து போயுள்ளதா? அந்த சாதத்தை எப்படியாவது காலி செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் இருப்பவர்களும் சாதம் வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படியானால் வீட்டில் முட்டை இருந்தால், அந்த முட்டையையும், மீந்து போன சாதத்தையும் வைத்து, முட்டை ப்ரைடு ரைஸ் செய்யுங்கள்.
இப்படி ப்ரைடு ரைஸ் செய்யும் போது, சாதம் வேண்டாம் என்று போனவர்கள் கூட, போட்டி போட்டு சாதத்தை காலி செய்வார்கள். முக்கியமாக இந்த பக்குவத்தில் ப்ரைடு ரைஸ் செய்யும் போது, கடைகளில் இனிமேல் ப்ரைடு ரைஸ் வாங்கி சாப்பிடமாட்டீர்கள். ஏனெனில் அந்த அளவில் இந்த ப்ரைடு ரைஸ் மிகவும் ருசியாக இருக்கும். குறிப்பாக இது ரெஸ்டாரண்ட்டுகளில் சாப்பிடும் முட்டை ப்ரைடு ரைஸ் போன்று அருமையாக இருக்கும்.

உங்களுக்கு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் முட்டை ப்ரைடு ரைஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் முட்டை ப்ரைடு ரைஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* முட்டை - 4
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்ழுன்
* உப்பு - சிறிது
ப்ரைடு ரைஸ் செய்வதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/2 (நீளவாக்கில் நறுக்கியது)
* கேரட் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
* முட்டைக்கோஸ் - 1 கைப்பிடி (நீளவாக்கில் நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சாதம் - 2 கப்
* சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* ஸ்பிரிங் ஆனியன் - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், 4 முட்டைகளை உடைத்து ஊற்றி, மிளகுத் தூள் மற்றும்
சிறிது உப்பு தூவி வதக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை
சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நீளவாக்கில் நறுக்கிய குடைமிளகாய், கேரட்,
முட்டைக்கோஸ் சேர்த்து, சிறிது உப்பு தூவி 3-4 நிமிடம் காய்கறிகளை வேக
வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சாதத்தை சேர்த்து, அதோடு சோயா சாஸ், மிளகுத் தூள்,
ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து, அத்துடன் ப்ரை செய்து வைத்துள்ள
முட்டைகளையும் சேர்த்து, உயர் தீயில் வைத்து 5 நிமிடம் நன்கு கிளறி
விட்டு இறக்கினால், சுவையான முட்டை ஃப்ரைடு ரைஸ் தயார்.



Click it and Unblock the Notifications