Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
மீந்து போன சாதம் நிறைய இருக்கா? அப்ப அத தூக்கி போடாம.. இப்படி ரொட்டி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அள்ளும்..
Leftover Rice Akki Roti Recipe In Tamil: காலையில் என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இட்லி, தோசை மாவு கூட இல்லையா? ஆனால் உங்கள் வீட்டில் மீந்து போன சாதம் நிறைய உள்ளதா? அந்த சாதத்தை என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?
அப்படியானால் அதைக் கொண்டு கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டியை செய்யுங்கள். இந்த அக்கி ரொட்டி செய்வதற்கு மிகவும் சிம்பிளாக இருந்தாலும், சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். அதுவும் இந்த அக்கி ரொட்டியை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.

காலை வேளையில் டக்கென்று ஒரு டிபனை செய்ய நினைத்தால், நிச்சயம் இது உங்களுக்கு ஏற்ற ஒரு காலை உணவு ரெசிபியாக இருக்கும். மறக்காமல் இதை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். அப்புறம் எப்போது சாதம் மீந்து போனாலும், அதைப் பற்றி கவலைப்படாமல், காலையில் இந்த அக்கி ரொட்டியை செய்வீர்கள்.
உங்களுக்கு மீந்து போன சாதம் கொண்டு அக்கி ரொட்டியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீந்து போன சாதம் கொண்டு செய்யக்கூடிய அக்கி ரொட்டி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன சாதம் - 1/2 கப்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1-2 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மீந்து போன சாதத்தை எடுத்துக் கொண்டு,
கைகளால் நன்கு மசித்து விட வேண்டும்.
* பின்னர் அதில் 1/2 டீஸ்பூன் சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம்,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து,
அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவையும் சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி, காரத்திற்கு
ஏற்ப 1-2 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து கைகளால் நன்கு ஒன்று
சேரும் வரை பிசைந்து விட வேண்டும்.
* பிறகு ஒரு வாழை இலை அல்லது கவரை எடுத்து, அதில் நல்லெண்ணெய் தடவி,
பிசைந்து வைத்துள்ளதை சிறிது எடுத்து, அதன் மேல் வைத்து சிறிது
தண்ணீர் தொட்டுக் கொண்டு தட்டையாக தட்டி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
நல்லெண்ணெய் சிறிது ஊற்றி தட்டி வைத்துள்ளதை கல்லில் போட்டு,
முன்னும், பின்னும் பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இதேப் போன்று அனைத்தையும் தட்டி போட்டு வேக வைத்து எடுத்தால்,
சுவையான கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டி தயார்.



Click it and Unblock the Notifications