Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது?
மீந்து போன பொரி இருக்கா? அப்ப அத தூக்கி போடாம.. இப்படி ஸ்வீட் செய்யுங்க.. வீட்டுல விரும்பி சாப்பிடுவாங்க..
Pori Laddu Recipe In Tamil: ஆயுத பூஜைக்கு வாங்கிய பொரி அதிகமா இருக்கா? அதை காலி பண்ண முடியலையா? அப்படியானால் அதிகமா இருக்குற பொரிய தூக்கி போடாம, அதை வெச்சு ஒரு சுவையான ஸ்வீட் செய்யுங்கள். அது தான் பொரி லட்டு. இப்படி பொரியைக் கொண்டு லட்டு செய்யும் போது, அது ருசியாக இருப்பதால், நொடியில் காலியாகிவிடும்.
முக்கியமாக இந்த பொரி லட்டு செய்வது மிகவும் சுலபம் மற்றும் இதை செய்வதற்கு வீட்டில் உள்ள ஒருசில பொருட்களே போதுமானது. குறிப்பாக இந்த பொரி லட்டு குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு மிகவும் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு பொரி லட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரி லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பொரி - 1 கப்
* தேங்காய் - 1/4 மூடி
* வேர்க்கடலை - 1/4 கப்
* ஏலக்காய் - 2
* வெல்லம் - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் பூஜைக்கு வாங்கிய மீந்து போன பொரியை மிக்சர் ஜாரில்
போட்டு ஒருமுறை அரைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அத்துடன் 1/4 மூடி துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும்.
* பின்பு வறுத்த வேர்க்கடலையை 1/4 கப் சேர்க்க வேண்டும்.
* அடுத்து நல்ல மணத்திற்கு 2 ஏலக்காயை சேர்க்க வேண்டும்.
* பின் சுவைக்கேற்ப வெல்லத்தை சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அரைத்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அதை சிறு சிறு
உருண்டைகளாக லட்டு போன்று பிடித்து வைத்தால், சுவையான பொரி லட்டு
தயார்.



Click it and Unblock the Notifications
