Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வெறும் 20 நிமிஷத்துல இந்த மாதிரி சூப்பரான சிக்கன் சுக்கா செஞ்சு பாருங்க... அப்புறம் வீட்ல தினமும் கேப்பாங்க...
Lazy Chicken Chukka Recipe: அசைவ உணவுப் பிரியர்கள் அனைவருக்குமே சிக்கன்தான் தேசிய உணவாகும். சண்டே மட்டுமே சிக்கனுக்கான நாள் என்ற வழக்கம் எப்போதே மலையேறி விட்டது. சண்டே மட்டுமே அசைவத்துக்கான நாள் என்பது அன்று மட்டுமே நிதானமாக சமைக்க நேரம் இருக்கும் என்பதால்தான். ஆனால் இப்போது ஹோட்டல்களின் புண்ணியத்தால் வாரம் முழுவதும் அசைவ உணவை மகிழ்ச்சியாக சாப்பிடலாம்.
ஹோட்டல்கள் பட்ஜெட்டை பதம் பார்க்கும் போது வீட்டிலேயே சுவையான சிக்கனை 20 நிமிடத்தில் செய்ய முடிந்தால் வேண்டாமென்றா சொல்வோம். உண்மைதான், ஒன் பாட் மீள என்று அழைக்கப்படும் உணவு வகைகளில் இந்த சிக்கன் ரெசிபியும் ஒன்றாகும். ஒரே பாத்திரத்தில் குறைவான நேரத்தில் செய்யக்கூடிய சுவையான சிக்கன் ரெசிபியை எப்படி செய்யலாமென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- சிக்கன் - ½ கிலோ
- மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- வரமிளகாய் - 2
- பெரிய வெங்காயம் - 1
- சின்ன வெங்காயம் - 10-12
- மிளகு தூள் - 1 டீ ஸ்பூன்
- கரம் மசாலா - ½ டீ ஸ்பூன்
* மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
- கஸ்தூரி மேத்தி - 2 டீ ஸ்பூன்
* எலுமிச்சை - ½ பழம்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- பட்டர் - 3 டீ ஸ்பூன்
- பட்டை - சிறிய துண்டு
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 1
- கல்பாசி - சிறிதளவு
- அன்னாசி பூ - 2
- தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- சிக்கனை நன்றாக தண்ணீர் சேர்த்து இரண்டு முறை அலசி
கொள்ளவும்.
- சிக்கனில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்றாக
பிரட்டி தண்ணீர் சேர்த்து நன்றாக அலசி எடுத்துக் கொள்ளவும்.
- வெங்காயத்தின் தோலை உரித்து பின் பொடிப் பொடியாக நறுக்கி
கொள்ளவும்.
- வர மிளகாய் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
- சிக்கன் உடன் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் வர
மிளகாயை சேர்க்கவும்.
- அதனுடன் அரைத்த இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள்,
மிளகு தூள், கரம் மசாலா சேர்க்கவும்.
- பின் அதனுடன் மல்லித்தூள், கஸ்தூரி மேத்தி, எலுமிச்சை சாறு மற்றும்
கொத்தமல்லி சேர்க்கவும்.
- பின் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, மற்றும் அன்னாசி பூ
மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.
- அரைத்த மாசாலா பொருட்களின் பொடியை சிக்கன் உடன் சேர்க்கவும்.
- அதனுடன் புளிப்பில்லாத தயிர், எலுமிச்சை சாறு, எண்ணெய், மற்றும்
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- பின் அதனை 30 நிமிடங்கள் ஊற விடவும்.
- அதன் பின் வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்க்கவும்.
- வெண்ணெய் உருகியதும் கலந்து வைத்த சிக்கன் சேர்த்து கிளறி மூடி
போட்டு வேக விடவும்.
- அவ்வப்பொழுது கிளறிவிட்டு 8 முதல் 10 நிமிடங்களுக்கு நன்றாக வேக
வைத்து எடுத்தால் சுவையான எளிமையான சுவையான சோம்பேறி சிக்கன்
ரெடி!



Click it and Unblock the Notifications