Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
வெண்டைக்காய் வெச்சு ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..
Ladies Finger Vadai Recipe In Tamil: தற்போது தமிழ்நாட்டில் ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. நிச்சயம் மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் கேட்பார்கள். மழை பெய்தாலே நிச்சயம் அனைவருக்கும் வடை, பஜ்ஜி, போண்டா என்று தான் சாப்பிட ஆசை எழும். உங்கள் வீட்டில் உள்ளோருக்கும் இப்படி சாப்பிட பிடிக்குமா?
அப்படியானால் வீட்டில் வெண்டைக்காய் இருந்தால், அதைக் கொண்டு சற்று வித்தியாசமான வடை செய்து கொடுங்கள். இப்படி வெண்டைக்காய் கொண்டு செய்யக்கூடிய வடையானது மிகவும் ருசியாகவும், மொறுமொறுவென்றும் இருக்கும். வெண்டைக்காயைக் கொண்டு வடை செய்தால், வெண்டைக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு வெண்டைக்காய் வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலைப் பருப்பு - 1 கப்
* வரமிளகாய் - 3
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* வெண்டைக்காய் - 10 (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* கடலைப் பருப்பு நன்கு ஊறியதும், அதை நீரில் கழுவி தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வரமிளகாய், பூண்டு, சோம்பு சேர்த்து
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்துள்ள கடலைப்பருப்பை சேர்த்து, நீர் ஊற்றாமல்
சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்ததை சேர்த்து, அத்துடன் பொடியாக
நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து கைகளால் நன்கு
பிசைந்து விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம்
கொஞ்சமாக எடுத்து உருட்டி வடை போன்று தட்டி, எண்ணெயில் போட்டு
பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும்
பொரித்து எடுத்தால், சுவையான வெண்டைக்காய் வடை தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications